
இப்படி இருந்த நான் ...
எப்படி ஆயிட்டேன்
நான் இது வரை ஒரு உதவாக்கரை போல் இருந்ததாலும், ( உதவாக்கரை போல் அல்ல, நிஜமாகவே உதவா கரை தான் )- அம்மா திருச்சியை விட்டு, சின்ன அண்ணாவுடன் டெல்லி சென்றதாலும், நான் எங்கே இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
நான் வீட்டுக்கு வெளியில், எவ்வளவு தான் பீலா விட்டாலும், அம்மா இல்லை என்றால் நான் அவ்வளவு தான், சாதம் தனியாக பிசைந்து சாப்பிட கூடத் தெரியாது, இது கிட்ட தட்ட ஸ்கூல் முடிக்கும் வரை, கொஞ்ச நாள் p.u.c யிலும் தொடர்ந்தது.
நான் கடைசி பிள்ளை என்பதாலும், அந்த கால கட்டங்களில், எனக்கு முன்பு பிறந்த ஒரு நான்கு குழைந்தைகள் இறந்து ( அம்மா இழந்து ) விட்டதாலும் , அம்மாவின் அரவனைப்பு எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ... எனவே நான் ஒழுங்கா சாப்பிட்டு வள்ரும்னனா டெல்லியில் படிக்கணும் என்று பிளான், . எனக்கு தான் திருச்சில ஆப்பு வைச்சாச்சே , எப்படியோ அதை இதை சொல்லி, டெல்லில காலேஜ் சீட் கிடைக்கிலைன்னு சொல்லிட்டு, திருச்சி திரும்பினேன். அப்ப தான் கல்யாணராமன் டிரைலர் வந்த சமயம், அதே பானியில " திரும்ப வருகிறான் சுந்தர ராமன்" ன்னு ஒரு கார்டு வரைந்து காலேஜ்க்கு அனுப்பினேன்...ஹி , ஹி ...ஹீரோயின் பேர் சஸ்பென்ஸ்ல விட்டுட்டேன் !!!!!டெல்லியில் இருந்து திரும்பி வந்தது - ஒரு North Star ஷூவுடன் + Wanted ஜீன்ஸ் போட்டுக்கிட்டு அலம்பல் பண்ணிநோமில்ல
ஒரு சுபயோக சுப தினத்தில் நானும் B.A படிக்க தொடங்கினேன். அம்மாவும் இல்லை, அண்ணாவின் பேச்சும் கேட்கறது கிடையாது, நிலைமை முற்றியது , அம்மா எதற்கோ திருச்சி வந்த பொழுது, நான் தனியாக இருக்க வேண்டும் என்று முடிவாகியது... நேர போஜி வீட்டுக்கு போனேன்,
அவங்க வீடு ஒரு அக்க்ஷய பாத்ரம் மாதிரி, சின்ன சர்வெண்ட் குவார்ட்டர்ஸ் ல தான் இருந்தாங்க - பக்கத்ல கார் shed . நான் சாப்பாடு வெளியில், அம்மா மாதம் 150 ருபாய் அனுப்ப வேண்டும். போஜி அம்மா பெரிய பெரிய மேனேஜர் வீடுகளில் வேலை செய்தார்கள், பெரியம்மா ,மற்றும் சின்னம்மாவும் அப்படியே, அது தவிர சில உறவினர்கள். தினம் இரவு ( மட்டும்) சமைப்பார்கள், எப்படியோ, தினமும் ஒரு ரெண்டு /மூன்று பேர் புதிதாக சாப்பிட வருவார்கள்... அவர்கள் வீட்டில் தான் என்ன ஒரு தாராள மனசு, எல்லாருக்கும் உணவு உண்டு, அவர்களின் நல்ல மனசுக்கு, இப்போது எல்லாரும் நன்கு இருகிறார்கள் - இப்பவும் விடுமுறையில் அடிக்கடி பார்ப்பதுண்டு
என்னுடைய சாப்பாடு அமுதம் கான்டீனில். மணி ஆர்டர் வந்தவுடன் எல்லாரும் என்னிடம் கடன், நிறய கொடுக்கல் வாங்கல் ... அப்பல்லாம் சாப்பாடு 1.ருபாய் 25 காசு தான். ...முதல் பத்து நாட்களுக்கு , தோசை, ரோஸ்ட், பூரி, சில சமயம் சோன்பப்படி..அடுத்த பத்து நாள் இட்லி, புல் மீல்... கடைசி ஒரு ஐந்து நாள், இட்லி, இட்லி,...கடைசி ரெண்டு நாள், பன், பழம், நிறய தண்ணி - ஒரு நாள் ஒன்னும் கிடையாது,...
அந்த வீட்டில் இருக்கும் பொழுது, என் அண்ணா பையன் ராகவன் அப்படிதான் ஸ்கூலுக்கு போகனும் - (ஒண்ணாம் / ரெண்டாம் வகுப்பு) , சித்தப்பா காசு அப்படின்னு கேட்ப்பான். நான் இல்லாத பொழுது, எங்க சித்தப்பா காசு வ்ச்ருப்பார்
எடுத்து குடுங்கன்னு உரிமையோட கேட்ப்பான்.
சாதம் பிசைந்து , ரெடியாக கிடைத்த கால கட்டத்தில் இருந்து, ஒரு உடனடி மாற்றம், தனியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும், துணி துவைக்க வேண்டும், அதை சரியாக உலர வைக்க வேண்டும், பின் அதை மடித்து வைக்க வேண்டும், படித்த படுக்கையை மடித்து வைக்க வேண்டும் .... இதில்லாம் ஒரு சாதரண ஜோலி தான், ஆனா எனக்கு, அந்த சமயத்தில் ... சின்னம்மாவிடம் எப்பொழுதும் திட்டு தான்.
காலேஜ்ல, ஒரே கலாட்டா தான் - காரணம் இல்லாமல் மகிழ்ச்சி, சிரிப்பு, ஆனந்தம். பேராசிரியர்கள் நன்றாக நடத்தும் பாடம், புதிய பாடங்கள், Peter Drucker போன்ற மேதைகள் உண்டாக்கிய management principles - எல்லாம் மிக சுவாரசியமாக இருந்தது. கனமான பெரிய புத்தகங்கள், மெதுவாக மனதுக்குள் நுழைந்தது.
கையில ....கொண்டை, அவுந்திடிச்சு ... அப்படியும், விடுவோமா ... அதை கையில வெச்சே , பேசிட்டோமில்ல

ஒரு நாடகத்தில் ( கீரை கிண்டிய கிட்டபொம்மன் )

என் பக்கத்ல ஐயரு மாத்ரி இருக்கறது பாப்டிஸ்ட் டி மில்லோ!!!!!.

அந்த சின்ன வீட்டில் நிறைய ஆட்கள் ஆனதால், நானும் அசோக்கும் ஒரு கார் ஷெட்டுக்கு மாறினோம். ஒரு நாள், திரு செல்வராஜ் மாலை வந்து சந்திக்கிறேன்னு
சொல்லிஇருந்தார். பக்கத்து வீட்டின் பின் புறம், அந்த வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண் குளித்து கொண்டிருந்தது - எனக்கு என்னோவோ ஜீனத் அமன் போல தெரிந்தது, அவளை அழைத்தேன், அந்தப் பெண் தமிழ் ஒரு மாதரியாக இழுத்து பேசியது, என்னுடைய வீட்டிலும் யாரும் இல்லை, அந்த பெண் கார் ஷெட்டுக்கு வந்தது, நான் ஒரு துண்டு மட்டும் கட்டி இருக்கேன், வாயிலில் நின்று கொண்டு , ஏன் கூப்பிட்ட.... ஒன்னும் இல்லை சும்மா தான்னு - நான். அந்த ஒரு நொடித் துளிகளில் என்னை இழந்திருக்கலாம் - என்னை சுதாரித்து கொண்டேன், அந்த பெண்ணும் எதற்கும் முன்பே வாயிலில் இருந்து ஓடி விட்டது. -
திரு செல்வராஜை பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பும், இப்படி எல்லாம் நடந்து கொண்டால் நம்ம ஆள் நம்மை பற்றி என்ன நினைக்க கூடும் என்ற பயமும், என்னுடைய நலன் கருதும், அம்மாவின் ஆசிர்வாததாலும் - ஒரு பெரிய இக்கட்டில் இருந்து கடவுளும் காப்பாற்றினார்.
புதிய மாணவர்களை, கவிதை எல்லாம் எழுதி, நோட்டீஸ் வினியோகித்து வரவேற்றோம். எல்லாம் ஒரு காரணத்துக்காக - கல்லூரி தேர்தல். டவுன்ல போய் போஸ்டர் எல்லாம் அடித்தோம், ரோட்டுல எழுதினோம் , ரெண்டு குழு உண்டாகியது - அடி தடி உண்டாவதற்கான எல்லா சாத்திய கூறுகளும் இருந்தது... எதிர் குழுவில், தஞ்சாவூர்ல இருந்து வந்த காட்டான்கள், நாங்களோ, டவுன்ஷிப்ள வளர்ந்த பாலிஷ்டு மக்கள். ஒரு நாளைக்கு, கூத்தைப்பார்ல இருந்து, ஒரு 8/10 - மாடு / ஆடு மேயப்பவர்களை காலேஜை சுற்றி நிறிததினோம்.-(திருமூர்த்தி உபயம் ) நிலைமை மோசமாகி கொண்டே போனது, - காம்ப்ரமைச்சுக்காக யார் யாரோ தலைவரை போய் பார்த்தோம். தொகுதி MLA அண்ணாதாசனை பார்க்கப் போனோம்- மனுஷன் காலங் கார்த்தால தூங்கி எழுந்த்ருக்கும் போதே சாராயம். ( கொஞ்ச நாட்களில் இறந்தும் போனார் ) - ஒன்றும் நடக்க வில்லை. எங்கள் ப்ரொபசர் திரு செல்வராஜ் மாற்றி அடிக்கப்பட்டார். ( டிரான்ஸ்பர் ).
எங்களோட ஒருமித்த கனவு கன்னி ஸ்ரீ தேவி , கொஞ்சம் ஸ்ரீ பிரியா, சரிதா , சுஜாதா, ஜெயசித்ரா அப்பறம் கவர்ச்சிக்கு சுமலதா , பிரமீளா, ஒய்.விஜயா போன்ற சைடு டிஷும் உண்டு, உதிரி பூக்கள் அஸ்வினியை கூட பிடிக்கும். காமிரா மேன் , கர்னனின் ஜம்பு ரொம்ப பிரபலம் அப்போ, அதை பார்க்க போனப்ப எனக்கு தெரிந்த பெண்ணின் அப்பாவும் வரிசையில் நின்றார்.. கமல் ரஜனி வாக்கு வாதங்களின் உச்சகட்டம் அப்போது, நான் சாமர்த்தியமா ரெண்டு கும்பல்லயும் உண்டு.
அந்த கால கட்டங்களில் இளையராஜாவின் இசை, வைரமுத்துவின் வரிகள், எங்களின் மன நிலை, எல்லாமாக சேர்ந்து அந்த இசையை கொண்டாடியது. அப்பொழுது வாக் மென் , ஐபாட், பெரிய மியூசிக் சிஸ்டம் ஒன்றும் கிடையாது. ரேடியோ, டைலர் கடை, டீகடை, இங்கு கேட்ட பாடல்கள் தான், ... நீல வான ஓடையில் மிதந்து கொண்டு ஆயரம் தாமரை மொட்டுக்களை பாய்ச்சியது, கருவாட்டுகூடை கூட மனத்தது. - அது ஒரு கனா காலம் என் கண்மணி.
நினைவுகள் பதிந்தது
நினைவுகள் - 7
நினைவுகள் - 6
நினைவுகள் - 5
நினைவுகள் - 4
நினைவுகள் - 3
நினைவுகள் - 2
நினைவுகள்-1


23 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:
உங்கள் நினைவுகள் சுவையாக இருக்கிறது...
சுந்தர் ராமன் சார், கலக்கல்..
//
எங்களோட ஒருமித்த கனவு கன்னி ஸ்ரீ தேவி , கொஞ்சம் ஸ்ரீ பிரியா, சரிதா , சுஜாதா, ஜெயசித்ரா அப்பறம் கவர்ச்சிக்கு சுமலதா , பிரமீளா, ஒய்.விஜயா போன்ற சைடு டிஷும் உண்டு, உதிரி பூக்கள் அஸ்வினியை கூட பிடிக்கும்.//
உங்க வீட்டுல இதெல்லாம் தெரியுமா?
//காமிரா மேன் , கர்னனின் ஜம்பு ரொம்ப பிரபலம் அப்போ, அதை பார்க்க போனப்ப எனக்கு தெரிந்த பெண்ணின் அப்பாவும் வரிசையில் நின்றார்..//
ஜம்பு, சன் டிவி மிட் நைட் மசலால பிரபலம்.. ஜெயசங்கர் படம் தான அது :))
//கமல் ரஜனி வாக்கு வாதங்களின் உச்சகட்டம் அப்போது, நான் சாமர்த்தியமா ரெண்டு கும்பல்லயும் உண்டு.//
இந்த சண்டை எங்க கல்லூரிக் காலத்துலயும் நடக்கும்.. மொத்ததுல கலக்கல் நினைவுகள்
கோர்வயா எழுத்துரீங்க.. நல்லா இருக்கு தலைவரே.
// ஒரு பெண் குளித்து கொண்டிருந்தது - எனக்கு என்னோவோ ஜீனத் அமன் போல தெரிந்தது,//
அந்தப் பாட்டு இப்பவும் பயங்கர ஃபேமஸ்..:)
//கவர்ச்சிக்கு சுமலதா , பிரமீளா, ஒய்.விஜயா போன்ற சைடு டிஷும் உண்டு,//
இந்த லிஸ்டுல முதல் ஆளுதான் டாப்..:)
சார் கலக்கி இருக்கீங்க..
நிறையா விஷயங்கள் வெளிப்படையா சொல்லி இருக்கீங்க..
இன்னிக்கு பாத்து வீட்டுக்கு போங்க..:)
//நாகா சொன்னது…
//கவர்ச்சிக்கு சுமலதா , பிரமீளா, ஒய்.விஜயா போன்ற சைடு டிஷும் உண்டு,//
இந்த லிஸ்டுல முதல் ஆளுதான் டாப்..:)//
:))
நீங்க அப்போதிலிருந்து எல்லா போட்டோவையும் போடறது நல்லா இருக்கு சார். நானும் என்னோட போட்டோக்கள பத்திரமா வெச்சிருக்கணும்னு இப்போ ஃபீல் பண்றேன்..
//இப்படி எல்லாம் நடந்து கொண்டால்
"நம்ம ஆள்" நம்மை பற்றி என்ன
நினைக்க கூடும் என்ற பயமும்//
மக்களே.. நல்லா பாத்துகோங்க..
இதுக்கு நான் பொறுப்பு இல்ல..
அவரே வாயை குடுத்துட்டாரு!
யாரு சார் அந்த :ஆளு: ?
சுவையான நினைவுகள்...
இன்னைக்கு இடி நிச்சயம்!!
//நீல வான ஓடையில் மிதந்து கொண்டு ஆயரம் தாமரை மொட்டுக்களை பாய்ச்சியது,///
arumai
kalakkal
வாங்க இஸ்மத் அண்ணே , நன்றி - மலேசிய பயணம் எல்லாம் இனிதே முடிந்ததா ..
வாங்க செந்தில் - வீட்ல தமிழ் படிக்க தெரியாது , அந்த தெகிரியம் தான் - நன்றி -
நன்றி கார்த்திக், எல்லாரும் சொன்னாங்க ... நான் கேக்கலேயே - டயரி மாதிரி தான் பதிவு எழுதுகிறேன் ...
சத்யமா இந்த சுந்தரத்துக்கு அது தெரியாது நாகா ... ஆனால் நான் எழுத வந்தது ஜீனத் அமன் மாதிரி தெரிந்தது ...இதில் சில வார்த்தைகளை எடுத்து விட்டேன் ...நீங்களும் சுமலதா விசிறியா....
வீட்ல எல்லா விஷயங்களும் தெரியும்.... அதுக்கு மேல, தமிழ் படிக்க தெரியாது
போடோக்களை குறைந்த பட்சம் ஸ்கான் செய்த்ருக்கணும்... நான் மறுபடியும் காமிராவில் க்ளிக்க்கியது ... சரியா வரலை என்று தான் சொல்ல வேண்டும் நாகா
என்ன கலை - அதெல்லாம் சொல்ல மாட்டோம் ..இன்னிக்கு நான் பெங்களூர் போறேன், அதுனால இடி இல்லை !!!!!!!??????
நன்றி என் pakkam pradeep
எப்படி இப்படி வெளிப்படையாக வீட்டு விஷயங்களை தயங்காமல் வீதியில் வைக்கிறீர்கள்? இது நல்லதாகவும் இருக்கலாம் பாதுகாப்பில்லாமலும் போகலாம்.
ஐயோ அக்கா , நீங்க வேற .... நான் ஒரு தப்பும் பண்ணலைன்னு தானே சொல்லிருக்கேன் ...உங்கள் வருகைக்கு நன்றி ..உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன்
நல்ல நடை...
உங்கள் நினைவுகளை தான் இப்போது நாங்கள் வாழ்ந்துக் கொண்டுயிருக்கிறோம். ;)
குடுத்த குடுப்புல எல்லாம் குபுக்ன்னு வந்து வௌியே வந்துருச்சு பாத்தீகளா? உங்கள் எல்லா நினைவுகளும் படித்து முடிந்ததும் எனக்கு நினைவுக்கு வந்த இரண்டு விஷயங்கள்.
1. வரிசையிலே போய் நிற்க வேண்டும். இருட்டா இருக்கேன்னு பயப்படவேண்டாம். தட்டுல காசு போடாட்டா பூவும் அர்சசனையும் எதிர்பார்க்க முடியாதேன்னு பயப்படவேண்டாம். வௌியே அருகில் உள்ள அந்த அரச மர பிள்ளையாரை மூன்று முறை சுற்றி வந்து ஒரு தோப்புக்கரணம் போட்டு விட்டால் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குமே அந்த எளிமை மிளிர்ந்தது. அதென்ன அப்டி சொல்லிட்டீக? டயரி மாதிரி எழுத்துன்னு? உலகத்தலைவர்களின் டயரி தான் இன்று பல பேருக்கு இங்கு மூலதனம். அந்த மூலதனம் தான் உங்களுக்கு இன்று உங்கள் பணிக்கு உதவிக்கொண்டுருக்கும் நிதி மேலாளர் பதவி?
2, உங்க பங்காளி சொக்கலிங்கத்தை உதைக்கோனும்? மூத்த ஆளுன்னு மொத்தமாக உங்கள் படங்கள் போலவே அத்தனையும் வைத்து கட்டி வைத்த அந்த சாக்கு மூட்டை வீடு மாற்றிய போது அண்ணியின் கைகளையும் மீறி எங்கோ? உங்கள் படங்கள் பார்த்ததும் நினைவுக்கு வந்த படங்கள் விருமாண்டி, தேவர் மகன்,
நாளும் தொடரும்
ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்.
ஜோதிஜி, ரொம்ப கூச்சமா இருக்கு, குளிருது....
நாம் பார்த்த இடங்களும், மனிதர்களும் தான் , நான் கடந்து வந்த பாதை, ஒரு சில பேருக்கு இது நேர் கோடு போல் இருக்கும், என்னை போல உள்ள அபாக்கியவாதிகளுக்கு, கொஞ்சம் பள்ளம் /மேடு /வளைவு/காடு/ மிருகம் .... என்னெவெல்லாமோ இருக்கும். .. அதை எழுதும் போது எப்படியாவது டயரி போல் தெரிவது இயற்கையே ..இருந்தாலும் படிப்பவர்கள் /பார்ப்பவர்கள் பொறுக்க.
நன்றி கோபிநாத்
hello uncle,
terribly sorry for the comment in english.
I'm Krithiga daughter of Kumaravalli
Great to see ur blog and its really great to read
will comment in tamil from next time
Take care uncle.
regards
தமிழில் எழுதவும் முயற்சி செய்யுங்கள் கிருத்திகா, .... ஊக்கத்திற்கு நன்றி, அப்பா, அம்மாவிடம் கேட்டதாக சொல்லவும்
Are u a 1963 baby?
//காமிரா மேன் , கர்னனின் ஜம்பு ரொம்ப பிரபலம் அப்போ, அதை பார்க்க போனப்ப எனக்கு தெரிந்த பெண்ணின் அப்பாவும் வரிசையில் நின்றார்..//
We did not attend the afternoon session of the school only he see the movie JUMBOO. After this picture Does anyone know he whereabouts of the Heroine!!!!!!!!! Jayamala
1962 sir, no news on that herione - thanks for you visit and comment
கருத்துரையிடுக