சனி, 10 அக்டோபர், 2009

என் ஸ்வீட் , காரம் & காபி

எல்லாரும் அவியல் / பஞ்சாமிர்தம் / கலக்கல் / கஞ்சி/.சான்ட் விச் ... இப்படியெல்லாம் எழுதுவது போல் நான் எழுத வந்தது SKC அதாவது ஸ்வீட் , காரம் , காபி, ... எங்க ஊர்ல , அதாவது திருச்சி BHEL , கைலாசபுரத்தில் ....அங்க வேலை பார்கற தொழிலாளி எல்லாம் ஒரு தீபெட்டியை சுண்டி அது விழும் பக்கத்தை வைத்து காசு வைத்து விளையாடுவார்கள் ... அதுல ஜெய்ச்சா SKC ... அது ... கடலை மிட்டாய் , முறுக்கு, டீ... ( ஆறு காசு )

BHEL லில் NMR வேலை என்றால் ரொம்ப பெரிய வேலை என்று நினைத்த காலம், காலனிகு உள் வரும் மாடுகளை எல்லாம் வெரட்டனும் . அந்த NMR வேலை கிடைக்கனமேன்னு வேண்டாத கடவுள் இல்லை... விதி வலியது, எங்கெங்கேயோ கூட்டி கொண்டு போய் இப்போ இங்க... ( ரொம்ப நாட்களுக்கு முன் ஒரு பதிவில், சே படிக்காமல் இருந்திருந்தால் ... இப்படி வேலை, பணம், அலைச்சல் , பிரஷர்...இது ஒன்றுமே வந்திருக்காது. ..ரொம்ப சரியான வார்த்தை - என்ன சொல்றீங்க !!!!!)

இனி என் ஸ்வீட் , காரம் & காபி

சமீபத்ல ரொம்பவும் . மனது கஷ்டப்பட்ட நியூஸ் , தேக்கடி படகு விபத்து . கொஞ்ச நாட்களுக்கு முன் அங்கு சுற்றுலா போன என் மாமா பையன், அதே படகு சவாரிக்கு போக ஆசைப்பட்டு, டிக்கெட் ட்ரை பண்ணினான் ஆனால் ..அங்கு ஒரு பெரிய மாபியா இருக்கு , காலை 5 மணிக்கு டிக்கெட் வாங்க போனால் கூட , நாலைந்து பேருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு டிக்கெட் இல்லை என்று சொன்னார்கள், என் மாமா பையன் விட வில்லை, இரண்டு நாள் பார்த்து விட்டு , மூன்றாவது நாள் பெரிய சண்டை போட்டான் ( சத்தம் ) ... யாரும் உதவிக்கு வர வில்லை ..கிட்ட தட்ட அந்த கும்பல் அவனை ஏளனம் செய்து அடிக்க வந்தார்கள் அவன் அந்த படகு பயணம் போகாமலே திரும்பி வந்து விட்டான் ... ஏன் என்றால் அத்தனை டிகட்டும் ப்ளாக்கில் .... அதற்க்கு அங்கு உள்ள அதிகாரிகள் , போலீஸ், ஏஜென்ட் எல்லாரும் உடந்தை. நான் போய் இருந்தால் கூட ப்ளாக்கில் வாங்கிருப்பேன்.... அதை நினைத்தால் மனம் கூசுகிறது. இப்படி ப்ளாக்கில் பணம் செய்றவங்க எங்க படகின் பாதுகாப்பை பத்தி யோசிச்சிருப்பாங்க ..சான்சே இல்லை ..கம்யுனிசம் ஒன்றும் கரை படியாத கட்சி இல்லை, நம்ப கரை வேட்டி போல அங்க பூந்து விளையாடறாங்க.


அப்படி நிறைய பேர் வாங்காமல் இருந்தால்/ இருந்திருந்தால் , நிறய பேரை படகுல ஏத்திருக்க மாட்டாங்க, அந்த லைப் ஜாக்கெட் கிழே எங்கோ பிரிக்கப்படாமல் இருந்திருக்காது , அதன் சூபர்வைசரோ அல்லது மானேஜர்.. அதை எப்படி யூஸ் செய்யணும் என்று விவரித்திருப்பார்கள் ...அந்த படகு மூழ்கி இருந்தாலும், அதை ஓட்டிய டிரைவர் / மற்றும் இதர பணியாளர்கள் நீச்சல் தெரிந்த மற்றும் பலர் , பத்து உயிர்களை காப்பாற்றினார்கள் என்று செய்தி வந்திருக்கலாம் ...சின்ன ப்ளாக்ல டிக்கெட்டு என்னவெலாம் செய்கிறது பார்த்தீர்களா???



உன்னை போல் ஒருவனும் பார்க்கலை, புதன் கிழமையும் பார்க்லே, அனால் அந்த விஜய் டிவி , கமல் ப்ரோக்ராம் பார்த்தேன், ... தீவிரவாதத்துக்கு தீவரவாதம் தான் தீர்வுன்னு கிடையாது, உரையாடல் வேண்டும் , பேச்சு வார்த்தை வேண்டும், என்று ரொம்ப க்ளியராவே சொன்னார். ... ஆனால் இந்த செக்யூலியர் பதிவர் மற்றும் பின்னூட்ட இடுபவர்கள் தொல்லை தாங்க முடியலே ... எல்லார்க்குமே தெரியும் இந்த கதை இது தான் என்று ... ஒரு வேளை, கதையிலே அந்த குஜராத் கரசேவர்கள் எல்லாம் கோத்ராவில் தானே தன் வண்டிக்கு தீ வைத்து பழியை வேறு பக்கம் போட்டு சதி செய்தார்கள் என்று சொல்லி இருக்கலாமோ ?? நன்றி லல்லு பிரசாத் யாதவ் ன்னு ஒரு கார்டு போட வேண்டிஇருக்கும் !!!!!



இப்போ இது சுற்றுலா சீசன் - துபாய்க்கு வெகு அருகில் ஆனால் ஓமான் நாட்டில் முசுந்தம் அப்படின்னு ஒரு இடம் இருக்கு, துபாய் லேந்து ஷார்ஜா போய் - ராசல் கேமா போய் அங்க ஒரு Barder செக் போஸ்ட் இருக்கு , அங்கிருந்து ஒரு அரை மணி நேர பயணம், பாதை மிக மிக ரம்யமாக இருக்கும் ஒரு பக்கம் வளைந்து செல்லும் பாதை, மறு பக்கம் நீல / பச்சை வண்ணத்தில் கடல் . முசுந்தம் ஒரு சின்ன ஊர் , கிராமம் போல இருக்கும், காலைல படகுல ஏறினா சாயங்காலம் கொண்டு வந்து விடுவாங்க , சாப்பாடும் கிடைக்கும் படகுல, அந்த படகு பயணம் ரொம்ப நல்லா இருக்கும், நிறைய மலைகள், வளைந்து வளைந்து செல்லும் மலைகள், அதன் நடுவே கடல், ரோடு வீடு, ஒன்னும் கிடையாது , கொஞ்சம் உள்ள போனவுடனே போட்டை நிறுத்தி, யாருக்கு வேண்டுமோ / தெகிரியம் இருக்கோ அவர்கள் கடலில் குதித்து மகிழலாம்.

அப்படி நான் செஞ்ச ஒரு குனஸ்ட்டை....




ஒரு பக்கம் வளைந்து செல்லும் பாதை, மறு பக்கம் நீல / பச்சை வன்னந்தில் கடல் ... முசுந்தம் ஒரு சின்ன ஊர் , கிராமம் போல இருக்கும், காலைல படகுல ஏறினா சாயங்காலம் கொண்டு வந்து விடுவாங்க ... சாப்பாடும் கிடைக்கும் படகுல,.அந்த படகு பயணம் ரொம்ப நல்லா இருக்கும், .... நிறைய மலைகள், வளைந்து வளைந்து செல்லும் மலைகள், அதன் நடுவே கடல், ரோடு வீடு, ஒன்னும் கிடையாது ... கொஞ்சம் உள்ள போனவுடனே போட்டை நிறுத்தி ... யாருக்கு வேண்டுமோ . தெகிரியம் இருக்கோ அவர்கள் கடலில் குதித்து மகிழலாம். துபாயில் இருந்து போய் வருவது மிக எளிது . வேண்டுமானால் ஒரு நாளில் போய் திரும்பி வரலாம் ..இல்லை, அங்கே தங்கலாம் , ஹோட்டல்கள் உண்டு

இங்க போடோ எல்லாம் பார்க்கலாம்











20 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:

Cable Sankar சொன்னது…

நைஸ் டைவ்.

ஷண்முகப்ரியன் சொன்னது…

உங்கள் ஸ்வீட்,காரம்,காஃபியினால் எனது காலைச் சிற்றுண்டி ஓவர்,சுந்தர்!

சுவையாகவும்,நிறைவாகவும் இருந்தது.

நிகழ்காலத்தில்... சொன்னது…

படங்கள் எல்லாம் எனக்கு அங்கே போகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன :))

சின்ன அம்மிணி சொன்னது…

கடைசிப்படம் அழகாக இருக்கிறது.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

சுந்தர் சார், ஸ்வீட் காரம் காபி அருமை.

முசந்தம் படங்களும் அருமை. டைவ் சான்ஸே இல்லை :)

மின்னுது மின்னல் சொன்னது…

good dive :)

☀நான் ஆதவன்☀ சொன்னது…

சூப்பர் ஸ்நாக்ஸ் சுந்தர் சார். அதுவும் டைவ் அருமையா இருந்தது.

முரளிகண்ணன் சொன்னது…

சுவையான சிற்றுண்டி

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

சுந்தர்ஜி வாழ்க..........எனது அடுத்த சுற்றுலா முசுந்தம்ன்னு அறிவிப்பு பதிவுலே போட்டிருந்தேன்....முந்திட்டிங்களே சுந்தர் சார்...நல்லா டைவ் அடிக்கிறீங்க...புகைப்படங்கள் அருமை....

கலையரசன் சொன்னது…

பயணப்பிரியர் தலைவா நீங்க!
நானும் டைவ் அடிக்கபோறேன்.. டைவ் அடிக்கபோறேன் வடிவேலு ஸ்டைலில் சொல்லிட்டு அடிக்கிற மாதிரி இருக்கு! சூப்பர்....

ஸ்வீட் , காரம் & காபி = அருமை, அட்டகாசம் & அழகு!

வினோத்கெளதம் சொன்னது…

தலை சூப்பர் டைவ்..
ஸ்வீட் , காரம் & காபி = Delicious..:)

கோபிநாத் சொன்னது…

\\வினோத்கெளதம் சொன்னது…
தலை சூப்பர் டைவ்..
ஸ்வீட் , காரம் & காபி = Delicious..:)
\\

ரீப்பிட்டே ;))

Barari சொன்னது…

sunder solvathu sarithaan karasevakarkal thaane thaan thee vaiththu kodaarkal//gujrath muslimkal thannaiye eriththu kuththi tharkolai seithu kondaarkal//malegonil thangle gundu vaiththu kondaarkal//sudarai pondravarkal modiyin voothu kuzal aaka iruppavarkalukku seculier padhivarkalai keliyaaka thaan paarppeerkal.enendraal neengal iruppathu dubaiyi allava?

நாகா சொன்னது…

சார், உங்க டைவப் பாத்துட்டு அப்படியே யூட்யூபுக்குள்ள போனா இந்த சாம்பா டான்ஸ் சான்சே இல்ல.. http://www.youtube.com/watch?v=kaQkRGCsWEY&feature=player_embedded

துளசி கோபால் சொன்னது…

ஆஹா...... சூப்பர்.

முசு சுந்துக்கெல்லாம் வர இப்போ நேரம் இல்லை. இதையே எங்கூருலே செலவில்லாம முடிச்சுக்கலாம்.

அருமையான ஏரிகளும். அலையே இல்லாத கடலும்
இருக்கு இங்கே!


இந்தத் தேக்கடி படகுக்குப் ப்ளாக்கிலே டிக்கெட்டா?

ஒரு மூணு வருசம் முந்திப்போனோம்.அப்பக்கூட ஒழுங்காத்தானே இருந்துச்சு( படகும்கூட)

தேவியர் இல்லம் திருப்பூர் சொன்னது…

தூங்கிக்கொண்டுருந்த தேவியர்களை உங்கள் டைவ் சத்தம் எழுப்பி விட்டது.

ஞாபத்தில் வைத்துள்ள இருக்கும் பழைய கடன்களை தீர்க்க சொல்கிறார்கள். இப்படி கூட இணைக்க முடியுமா? என்பது எனக்கு புதிய விஷயம்.


எல்லா செய்திகளுக்குப்பின்னால் இருக்கும் "எதிர்மறைநியாயங்களை" ஊன்றி படித்துவரும் எனக்கு உங்கள் படகு செய்தி உண்மையிலேயே இங்கு எந்தப்பத்திரிக்கையிலும் வராத செய்தி. நீங்கள் குறிப்பிட்ட மாநிலம் இன்று வரையிலும் கேள்விகள் நிரம்பி உள்ள மகத்தான பூமியாகத்தான் தெரிகிறது.

பயணச்சீட்டு கிடைக்காவிட்டால் என்ன? அவர் வாழ்க்கை சீட்டு உறுதிபடுத்தப்பட்ட சிறப்பு சந்தோஷம் அளிக்கிறது.


ரசிகனாக, வெறியான தொடக்கம் முதல் பார்த்துக்கொண்டுருக்கும் எனக்கு திரை அரங்கம் போய் பார்த்துவந்தாலும் சற்று ஏமாற்றம் தான். கதையே, களமோ, கருத்தோ அல்ல. இது போன்ற தூசு சமாச்சாரங்கள் செய்வதற்கு எத்தனையோ பேர்கள் தான் இருக்கிறார்களே? இவர் உயரத்தில் நின்று கொண்டு என்னை கீழே தள்ளிவிட்டார். முதல் முறையாக தர்ஷிணியை அழைத்துச் சென்று அவருக்கு சுவாரசியம் இல்லாத படமாக நான் எதிர்பார்த்த திறமை இல்லாத படமாக போய்விட்டது.

அதனால் என்ன? நேரிடை ஒலிபரப்பில் கேட்ட கேள்விகள் அத்தனை பேர்களும் நேயர்களைவிட மதிக்கக்கூடிய பெரிய மனிதர்கள் ஆக்ரமித்தது மொத்தத்தில் ஆச்சரியம், அது தான் அவரின் ஆளுமை ரகஸ்யம்.


இன்று காலை முதல் ஒவ்வொன்றும் சந்தோஷ செய்தியாகவே வந்துகொண்டுருக்கிறது. உங்கள் காபி மட்டும் போதும். காரணம் தான் உங்களுக்குத் தெரியுமே? திருப்பூரில் பொழுதை போக்க வழி இல்லாமல் (?). நீங்களோ புலரும் பொழுதுகளை அனுபவிக்கிறீர்கள்.

புகையை கண்டு கொள்ளாதீர்கள்(?)

இராகவன் நைஜிரியா சொன்னது…

அண்ணே சூப்பர் டைவ். எங்க கத்துகிட்டீங்க...

தேக்கடி - லஞ்சம், கரப்ஷன் - எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. தாங்க இயலவில்லை.

உங்கள் வர்ணனை - // பாதை மிக மிக ரம்யமாக இருக்கும் ஒரு பக்கம் வளைந்து செல்லும் பாதை, மறு பக்கம் நீல / பச்சை வண்ணத்தில் கடல் . //
பிரமாதம்... டிபிக்கல் சுந்தர் அண்ணன் டச்..

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

வாங்க ஷங்கர் சார், உங்கள் முதல் வருகைக்கு நன்றி ... எங்க ஊருக்கு பக்கத்ல, துவாகுடின்னு ஒரு ஊர் இருக்கு, அங்க கருங்கல் குவாரியில் சும்மா அம்பது அடி உயரத்தில் இருந்து குதித்து பழக்கம் ( ஹி ..ஹி )

ஷன்முகப்ரியன் சார் நன்றி

வணங்க முரளிகண்ணன் சார், உங்கள் முதல் வருகைக்கும் நன்றி, மேல சொன்ன அந்த குவாரி தண்ணி, நாகராஜன் சந்து சமாச்சாரமெல்லாம் உண்டு ... அந்த கருங்கல் குவாரி தண்ணியும் பச்சை தான், இந்த கடலும் பச்சை தான் !!!!!!

வாங்க சிவா, இங்க சாதரணமா கடல் ரொம்ப சுத்தமா நல்லா இருக்கும் .வாய்ப்பு கிடைத்தால் வரவும்.

வாங்க மின்னல் நன்றி

கிஸ்மத் அண்ணன் மன்னிக்கவும், உண்மையில் உங்கள் பதிவை பார்க்க வில்லை ...உங்கள் பதிவும் , படமும் மிக அழகு ..நிறைய விஷயங்கள் உள்ளது

நன்றி கலை ..பயணமும் ..நினைவுகளும் தான் என்னிடம் உள்ளது . அதை முடிந்த வரை பகிர்கிறேன்

செந்தில் சார், நன்றி ..அருமையான சுற்றலா இடம், முடிந்தால் குடும்பத்துடன் போய் வாருங்கள்

நன்றி ஆதவன் சார்,

வாங்க சின்ன அம்மணி , உங்கள் முதல் வருகைக்கு நன்றி -

வாங்க வினோத் , கோபிநாத்

வணங்க ஜோதி ஜி, நான்னும் இந்த கொடுமையை செஞ்ச்ருக்கேன் ... மகளை முதன் முதலில் விருமாண்டி படத்துக்கு , குழ்ந்தை பயந்து போய்ட்டா.

வாங்க Barai , நான் சொன்னேதேன்னவோ மிகவும் கம்மி, நான் கோடிட்ட அந்த பதிவர்களோ /அல்லது பின்னோட்டம் இடுபவர்கள், கமல் இந்த படத்தில் நடிக்க போகிறார் என்றவுடனே, இது தான் கதை என்று தெரிய வேண்டாமா. அப்பொழுது யாரவது ஒரு சின்ன சத்தம் கூட போடவில்லேயே. மோதி பற்றி அதில் நான் ஒன்றுமே சொல்ல வில்லேயே.

நாகா வாங்க ..அந்த சல்சா அட்டகாசம் ... நன்றி

வாங்க அம்மா துளசி டீச்சர் , நன்றி உங்கள் முதல் வருகைக்கு. கூட்டம் இருந்தா கறுப்பு சந்தை உண்டு போல.

அண்ணே , நைஜீரியா ராகவன் அண்ணே, வாங்க , நன்றி...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வணக்கம் சுந்தர் சார்,நலம் தானே?
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நானும் போன மாதம் முசாண்டம் போய் வந்தேன்,மிக அழகிய இடம்,ஆனால் சுற்றுலா வசதிகள் இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும்.டால்பின் பார்க்க மகிழ்வாக இருக்கும்,அதுவும் அந்த நீண்ட கடற்கரையும் அதை தொட்டு தொடரும் மலை சாலையும் மிக அருமையான அனுபவம்,
அதில் ஒரு கூத்து யூ ஏ இ எல்லையில் வெளீயேற 25 திர்காம் வாங்குகிறார்கள்.ஒமான் எல்லையில் நுழைய தலைக்கு 10 திர்காமும் காரின் இன்சூரன்சுக்கு 100 திர்காமும் வாங்கினார்கள்.ஒர்த் இட்.ஒரே எரிச்சல் பாஸ்பொர்டுக்கு எக்சிட் சீல் வாங்க வெய்யிலில் நிற்பது தான்.

நீங்க ஃபீல் பண்ணி சொன்ன தேக்கடி போட் புக்கிங் நானும் அனுபவித்துள்ளேன்.அவர்களீன் பணத்தாசை
உலகறிந்தது ஆயிற்றே?
சுலபமாக குறுக்கு வழியில் சம்பாதிக்க/முன்னேற நினைப்பவர்களில் இவர்களூக்கே முதலிடம்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

இந்தத் தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்க இருப்பது:-
அது ஒரு கனாக்காலம் திரு. சுந்தரராமன் அவர்கள் ( அமீரகத்தில் இருக்கும் இவர் ,எங்கள் எல்லொருக்கும் சொந்தக்காரர். மிக யதார்த்தமான எழுத்துக்களுக்கும் சொந்தக்காரர்)

கருத்துரையிடுக