புதன், 12 மே, 2010

ராக தேவன் இளைய ராஜாவும் என் அண்ணன் மகனும்



அண்மையில் என் அண்ணன் மகன் ரகு ( ராகவன் ) இளைய ராஜாவை சந்தித்து சிறிது உரையாடி மிகவும் மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

என்னுடைய பத்தாம் வகுப்பு காலத்தில் தான் அன்னக்கிளி வந்தது... கூடவே , பதினாறு வயதினிலே , சிகப்பு ரோஜாக்கள், காயத்திரி, கவிக்குயில் , கழுகு , பத்ரகாளி ... அப்பறம் கல்லூரி நாட்களில் , நிறம் மாறாத பூக்கள் , ராஜ பார்வை , டிக் டிக் டிக் , மூடு பனி .. அது ஒரு நீண்ட பட்டியல் .. ராஜாவின் பொற்க்காலம், முரளி , ராம ராஜன், ராஜ் கிரண்- இவர்களின் வளர்ச்சியில் ராஜாவின் பங்கு மிக பெரியது... அது போல எத்தனை எத்தனை தயாரிப்பாளர்கள் , ராஜாவினால் வெற்றிப்படம் கண்டார்கள் ...





என் அண்ணன் மகன், இசையில் மிக ஆர்வம் உள்ளவன், இசை பள்ளி அல்லது யாரிடமும் இசை கற்க வில்லை ... இசையை கேட்டு / கேட்டு ...படித்து ( புத்தகம் / நெட் ) இசையில் ஆழ்ந்த ஞானம் உண்டு ... ஓரளவுக்கு எல்லா ராகங்களும் தெரியும் ... எந்த சினிமா பாடல்களை கேட்டாலும் , அது இந்த ராகத்தில் வந்தது, ...அப்படி / இப்படி மணி கணக்கில் பேசுவான்.... கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு , அப்படி இருந்தும் சினிமா பாடல்களிலும் மிக்க ஆர்வம் உண்டு. இளைய ராஜாவின் பரம் ரசிகன் / வெறியன் ... சென்ற வாரம் அவரை காண ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது , அது பற்றி அவனுடைய பதிவில் எழுதி இருக்கிறான்.


அது பற்றி அவனுடைய பதிவில் எழுதி இருக்கிறான்.



நான் பத்தாவது படிக்கும் பொழுது , கோட்டூர் புரத்தில் வசித்தோம், அப்பொழுது தான் எம்.ஜி. ஆர் , தன கட்சியை ஆரம்பித்து திண்டுகல்லில் ஜெயித்து ( மாயாண்டி தேவர் ), வளர்ந்து வரும் நேரம், . வெள்ளம் வந்து மக்கள் அவதி பட்டதால், ஆறுதல் சொல்ல வந்தா நேரம், எங்கள் வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் உள்ள குடிசை பகுதிக்கு வந்திருந்தார், அவர் காரின் உள்ளே இருந்தார், அவருடைய பழக்கமான வேளை வேஷ்டி , சந்தன கலர் சட்டை ( அல்லது வெள்ளை சட்டையோ ????) ... கருப்பு கண்ணாடி, வெள்ளை காஷ்மீர தொப்பி .... ஆள் சும்மா , தக தகன்னு ஒரு மாதிரி ரோஸ் கலர் - பார்த்தவுடன் வசீகரிக்கும் தன்மை, இத்தனை ஆண்டுகள் கழிந்தும், இன்னும் மறக்க முடியாத சந்திப்பு ...அது போல என் அண்ணன் மகனுக்கு ஒரு மறக்க முடியாது அனுபவம்.


4 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

சுந்தர சார்,உங்கள் போலவே ரகுவும் இசைஞானி ரசிகர் என அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.அவரை மருத்துவமனைக்கு காரோட்டி கூட்டி வந்த சம்பவத்தை மிக அழகாய் எழுதியிருந்தார்.பகிர்வுக்கு நன்றி.

கே.ரவிஷங்கர் சொன்னது…

ஆஹா...! பொறாமையா இருக்கு சார்! ராஜாவ ஒரு வாட்டி கூட நேர்ல பாத்ததில்ல.அவர் இசை மூலம்தான் பேச்சு/பார்வை எல்லாம்.நவராத்திரில அவர் வீட்ல போய் பிரீயா பாக்கலாம்னு சொல்றாங்க.

ஜோதிஜி சொன்னது…

ஒரு முறை நண்பர்களுடன் சென்று வாயில் காப்போன் மக்களிடம் இருந்து தப்பித்து சென்ற நான்கு பேர்களில் நான் மட்டும் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் உள்ளே நுழையும் இடத்தில் இரண்டு கதவுகள் சந்திக்கும் இடத்தில் இடையில் உள்ள இருட்டு பரப்பில் நின்று கொண்டு கண்ணாடி வழியே உள்ளே இளையராஜா இசைக்கோர்வை எழுதிக்கொண்டுருந்த நிகழ்வுவை பார்த்துக்கொண்டுருந்தது இப்போது மனதில் வருகின்றது.

கார்த்திகேயன் எழுதியுள்ள இளையராஜா பற்றிய ஒரு பெரிய ஆராய்ச்சி பொக்கிஷ இடுகையை படித்து விட்டீர்களா சுந்தர்.

இன்று கூட ஊரில் வயசான பெரியவர்கள் எம்ஜீஆர் இறந்து விட்டார் என்று சொன்னால் அடிக்க வருகிறார்கள். மெஸ்மரிசம் என்பதை உண்மையிலேயே வாழ்ந்து காட்டியவர். தகதக நல்ல உவமை.

ஜீவன்பென்னி சொன்னது…

ராஜா ராஜா தான்.

கருத்துரையிடுக