அந்த கேள்வி வாய் தவறி தான் வந்திருக்கும் என நம்புகிறேன் . ரொம்ப நாள் முன்னாடி, மும்பையில் வசிக்கும் பொழுது ஒரு மழை காலத்தில் மாத்தேரன் போய் இருந்தோம், ஒரு பெண், அங்கிள் கொஞ்சம் நகருங்க என்று சொன்னவுடன் அது எனக்கு கேட்க கூட இலலை, மீண்டும் அந்த பெண் அங்கிள் உங்களை தான் என்று சொன்னபொழுது , எனக்கு சில நாள் உறக்கம் போனது.
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
ஒரு நாள் ஏதோ ஒரு ஹிந்தி பட காட்சியை பார்த்து கொண்டிருந்த பொழுது , அதில் ஒரு காட்சி படி மிதுன் தன்னுடைய காலமாகிய ஒரு மகனின் போட்டோவை பார்த்து அழுது கொண்டிருப்பார், என் மகள் அதை பார்த்து , ஏன் அவர் அழுகிறார் என்றாள்?. அவரோட மகன் , ஆர்மியில் போர் செய்யும் பொழுது இறந்து விட்டார் என்று சொன்னேன். ஆர்மினா என்ன என்றாள் ? ஆர்மினா, வேற்று நாடுடன் சண்டை போட்டு , நம்மை காப்பவர்கள் என்று சொன்னேன் . அது மாதிரி ஆர்மியில் சண்டையில் உயிர் போயிருக்கும் என்றேன்
, உடனே என்னை பார்த்து நீ ஆர்மிக்கெல்லாம் போகதே என்று சீரியசாக சொன்னாள்.
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
தினமும் குளித்து (!!!!???***) சாமிக்கு விளக்கு ஏற்றி , ஊதுபத்தி காமிக்கும் பழக்கம் உண்டு , அண்மையில் உடுப்பி சென்ற பொழுது ஒரு சின்ன மணி மண்டபம் / தேர் போல உள்ள , ரோஸ் wood ல செய்த அந்த மண்டபத்தில் உள்ள சின்ன /குட்டி கிருஷ்ணனுக்கு , அதுனுள் ஊதுபத்தி காமிப்பேன், அந்த வெள்ளை புகை நிறைய அந்த மண்டபத்தில் பரவி, சில நொடிகளுக்கு அங்கேயே இருக்கும். என் மகளை கூப்பிட்டு , பார்த்தியா எவ்வளவு நல்லா இருக்குன்னு கேட்டேன், அதற்கு அவள் " அப்பா , அங்க இப்படி நிறைய புகை எல்லாம் போடதே சாமிக்கு இருமல் வரும் ".... ஒரு நிமிடம் ஆழ்ந்து சிந்தித்தேன், இப்பொழுது அங்கே நிறைய புகை வருமாறு செய்வது கிடையாது .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
சில நாட்கள் முன் இந்தியா ஒரு வாரம் போயிருந்தோம் , . நிறைய கோவில்கள் பார்த்தோம். பெங்களூரில் போய் இறங்கியவுடன் , உடனே முன்பே ஏற்பாடு செய்திருந்த இன்னோவா காரில் புறப்பட்டோம் ... வண்டி மைசூர் போகும் பாதையில் பாதி தூரம் போனது, நல்ல , வழ வழப்பான புதிய சாலை ..போகும் வழியில் பிடதி ஆசிரமம் வழியாக தான் போனது ..வெளியில் இருந்தே /காரில் போய் கொண்டே பார்த்தோம்,.....
கோவில்கள் பற்றி நம்ம துளசி டீச்சர் ரொம்ப அழகாக / விரிவாக நிறைய படங்களுடன் பதிவு பதிந்துள்ளார் அதற்க்கு இங்கு கிளிக்கவும்.
வழியில் ஒரு சின்ன இடத்தில காபிக்காக நிறுத்தினோம், அங்கு குழந்தைக்காக புல்லாங்குழல், ஒரு ஒன்றுக்குள் ஓன்று நுழையும் பொம்மைகள் வாங்கினோம். கையில் ஐ பாட் இருந்ததால் அருமையான இசையும் சேர்ந்து கொண்டது ( பெரும்பாலும் கர்நாடக இசை ) .
முதலில் தரிசனம் செய்தது - சிரிங்கேரி - அருமையான இடத்தில புராதனமான கோவில், குறைந்த பட்சம், ஒரு நாளாவது தங்கி நன்கு பார்க்க வேண்டும், ஆனால் நாங்கள் அங்கு இருந்த நேரம் சில மணி நேரங்கள் மட்டுமே - ஆற்றில் உள்ள மீன்களை பார்த்து என் அண்ணா அடித்த கமெண்ட், இது துபாய்ல பார்த்த டால்பினை விட நல்லா கொழு கொழுன்னு பெரிசா இருக்கே ??????
அங்கிருந்து நேராக மூகாம்பிகா போனோம், அடர்ந்த காடுகள் , கும்மிருட்டு , போய் சேர்வதற்குள் இரவு ஆகி விட்டது- கோவில் அருகிலேயே சூப்பர் லாட்ஜ் , ஏ.சி வண்டியில் வந்த களைப்பிற்கு , அருகில் உள்ள சின்ன உணவகத்தில் சாப்பிட்டு, அடுத்த நாளைக்கு தயார் ஆனோம் ...
கோவிலுக்கு போவதற்கு சில நாட்கள் முன் இந்த 360 டிகிரி , புகை படம் கிடைத்தது நேரில் அது போலவே இருந்தது - கேரளா பாணி கோவில், மிகவும் விடியற் காலை போய் சேர்ந்து விட்டோம், அம்பாள் கோவிலாக இருந்தாலும் நான் எனக்கு தெரிந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்னேன் (படித்தேன் !!!!) . அருமையான தரிசனம், கொடுநல்லூர் கோவில் நினைவில் வந்தது ...
சரஸ்வதி மண்டபத்தில் வைத்து மகளுக்கு வித்யாரம்பம் செய்தோம், மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது ... ரொம்ப சின்ன ஊர், நிறைய சிற்றுண்டி கடைகள் , .மதியம், கோவிலில் எல்லாருக்கும் கிடைக்கும் அந்த அன்ன தானத்தில் போய் உண்டோம், ரொம்ப ரொம்ப ருசியா இருந்தது, பூசணிக்காய், பரங்கி காய் எல்லாம் போட்டு சாம்பார் , சுட சுட ஆவி பறக்கும் சாப்பாடு , ருசியான ரசம் , பாயாசம் ...
அங்கிருந்து பிற்பகலில், முர்தேஷ்வர் என்கிற சிவாலயத்திற்கு போனோம், இது பற்றி நம்ம துளசி டீச்சர் ரொம்ப அழகாக / விரிவாக
நிறைய படங்களுடன் பதிவு பதிந்துள்ளார் அதற்க்கு இங்கு கிளிக்கவும்.
நானும் சில படங்கள் மட்டுமே எடுத்தேன் ... அதில் சில

முர்தேஷ்வர் கோவில் அருகில் உள்ள பீச், ரொம்ப நல்லா இருக்கு, படகு சவாரி, தண்ணீர் பைக் , போன்ற நிறய விளையாட்டுகளும் இங்கு உண்டு

முர்தேஷ்வர் கோவில் அருகில்


ஹொரநாடு ......தங்கும் இடம்

இத்தனை பேர்தான் இந்த ட்ரிப் போனோம்

கோடையிலும் பச்சை பசலேன்று காணும் காடுகள்


அங்கு ஒரு வெளிநாட்டு குழுவினரை பார்த்தோம், சென்னையில் இருந்து ஆட்டோ ரிக்க்ஷாவில் மும்பை / கோவா வரை போகும் வழியில் அங்கு வந்துள்ளார்கள் , நல்ல ஐடியா போல தான் தோன்றுகிறது , ஆனால் நாம்ப இது மாதிரி எல்லாம் செய்ய மாட்டோம் ,
உடுப்பி போனவுடன் ( கிட்ட தட்ட இரவு ஆகி விட்டது ) ... உடனே குளித்து கோவிலுக்கு போனோம், (துளசி டீச்சர் பதிவு - இங்கு) ரொம்ப சின்ன கோவில் / பிரகாரம், கூட்டம் இலலை , ரொம்ப நல்ல தரிசனம் - சுத்தி சுத்தி வந்தால் அடிக்கடி பகவானை நன்கு தரிசிக்கலாம். அதெல்லாம் முடிந்த பிறகு, கோவிலின் ஒரு ஊழியர் எங்களை அடுத்த நாள் விடியற்காலை வருமாறு சொன்னார். ஏதோ ஒரு வெகு புராதனமான சிற்றுண்டி கடையில் சுவையான டிபன் சாப்பிட்டு உறங்கப்போனோம்.
நான் கிட்டத்தட்ட மூற்றரைக்கே எழுந்து குளித்து கோவிலுக்கே போய்விட்டேன், அப்பொழுது தான் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் எலாம் தொடக்கம், சுத்தி சுத்தி வந்து தரிசனம் செய்தேன், ஒரு சிலர் பாடினர், எனக்கும் பாட வேண்டும் என்று மிக ஆவல், ஆனால் புஸ்தகம் ஒன்றும் கையில் இலலை - கையில் கொண்டு போயிருந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அந்த மண்டபத்தில் சாமி முன் சொன்னேன் , அடிக்கடி எழுந்து போய், பகவானையும் தரிசனம் செய்தேன், கொஞ்ச நேரத்தில் அண்ணன், மற்றும் என் மனைவி , மகள் எல்லோரும் வந்தார்கள் ...
சரியாக காலை 6.30 மணிக்கு, வாங்க , எல்லாரும் சாப்பிட போகலாம் என்றார்கள் , அன்று துவாதசி, ஸ்பெஷல் சாப்பாடு என்று சொன்னார்கள். பெரிய சாப்பாடு ஹால் , எல்லாரையும் உட்கார வைத்து பரிமாற தொடங்கினார்கள் , ஒரு இருபத்தியஞ்சு ஐட்டம் இருக்கலாம் - பரிமாறினார்கள் - அந்த மடத்தின் பெரிய சுவாமிஜி வந்து எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்து - பின்பு தான் சாப்பிட தொடங்கினோம், சில சமயங்களில் வெகு அபூர்வமாக விடியற்காலை டிபன் சாப்பிட்ட அனுபவம் உண்டு, ஆனால் இது மாதிரி அதி காலையில் சாப்பாடு இது தான் முதல் தடவை - பாயாசம் / பருப்பு , நெய், அது இது ..ரொம்ப ருசியான சாப்பாடு . பின்பு அங்கிருந்து தர்மஸ்தலா போனோம்.
தர்மஸ்தலாவில், உச்சி நேரம் , எங்கு பார்த்தாலும் ஒருவித ஒழுங்கு , நோட்டீஸ் போர்டு, அறிவிப்புகள், வரிசையில் நிற்க , போக தடுப்புகள் - வரிசையில் போய் கொண்டிருந்த பொழுது - ஒர்லாண்டோ டிஸ்னி லான்ட் ஞாபகம் வந்தது . அங்கும் அது போல் ஒவ்வொரு ஸ்டுடியோ போவதற்கு, பெரிய வரிசை இருக்கும், அங்கங்கு பெரிய விசிறிகள் இருக்கும் ( table / wall mounted ) , அங்கங்கு டிவியில் ஏதாவது அறிவிப்புகள் / அங்கு என்ன நடக்க போகிறது என்று செய்திகள்... அதே போலவே இங்கு, நிறைய இடத்தில சுத்தமான டம்ப்ளரில் நல்ல குடிநீர் , திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு பிறகு, நான் பார்த்த கோவில்களிலேயே ஒரு ஒழுங்கு, சுத்தம் , விவரம் . அருமையான கோவில் . உடனே அங்கிருந்து கிளம்பி விட்டோம்
போகும் வழியில் ஒரு இடத்தில காபி / டிபன் / டீ க்கு நிறுத்தி போனோம். மலையில் உள்ள ஹொரநாடு கோவிலுக்கு மாலையில் போய் சேர்ந்தோம், போகும் வழி எல்லாம் பசுமையான அடர்ந்த காடுகள் , வானளாவிய உயர்ந்த மரங்கள் , அவதார் சினிமா காட்சிகள் போல இருந்தது , சில இடங்களில் ரிசார்ட் போர்டுகள் தென்பட்டது . இசையும் / ஓரளவுக்கு நல்ல சாலையும் / ஏசி வண்டியும் / தேர்ந்த ஓட்டுனரும் எல்லாமாக சேர்ந்து பயணம் மிக சௌகரியமாக இருந்தது ...
கோவில் போய் அன்ன பூர்நேஸ்வரியை தரிசனம் செய்தோம், பெரிய கோவில் , மிக பெரிய விக்ரஹம், மனைவி, மன்னி , மாமியார் எல்லாரும் லலிதா சஹாஸ்ரனாமத்தை உரக்க சொன்னார்கள் , நான் கூடவே ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை!!!!.
அங்கு தங்குவதா வேண்டாமா இன்று அலசிவிட்டு, அன்று இரவே கிளம்பி விட்டோம். நான் கொண்டு போயிருந்த காமிரா பழுது என்பதால் நிறைய உபயோகிக்க வில்லை , மேலும் கோவில் போன்ற இடங்களில் அது பற்றிய ஞாபகம் கூட வரவில்லை - இருந்தாலும் நான் புகை படம் நிறைய எடுத்திருக்க வேண்டும் - ( இன்னும் பல முறை அங்கு செல்ல வேண்டும் - )

பெங்களூர் வீட்டில் கப்லா என்ற விளையாட்டு - சிறிய குழந்தைகாளுக்கான விளையாட்டு - ஆனால் பெரியவர்களும் விளையாடலாம் - செவ்வக மர கட்டைகள் - அதை வைத்து என்ன வேண்டுமாலும் செய்யலாம் நான் செய்த உயரமான ...டவர்

7 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:
குடும்பத்தோடு கூட்டமாப் போனால் அது(வும்) ஒரு மஜாதான்.
அப்பப்ப நம்மைக் கண்டுக்கிட்டதுக்கு நன்றி.
'ரத்ன சுருக்' கட்டுரை. சூப்பர்.
டீச்சர் நீங்க நம்ம பக்கம் வந்தது - தன்யனானேன். நீங்க எழுதின ( இந்த கர்நாடக கோவில்கள் பற்றிய ) கட்டுரையை பிரிண்ட் அவுட் எடுத்து, அதே இடங்களுக்கு திருப்பி போகணும் - அவ்வளவு தான் வேணும் !!!!???
அந்த 360 டிகிரி போட்டோ பார்த்தீங்களா ? ...
பார்த்தேன். அட்டகாசமா இருக்கு. கோபாலுக்கும் காமிக்கணும்.
அருமையான பயணக்கட்டுரை சார்
I am late. Coming back with tamil fonts. Of course Teachers "varnanaikal" fantastic.
டீச்சரின் பதிவில் உள்ள படங்கள் மிகச் சிறப்பாக இருந்தது. நீங்கள் முயற்சிக்காமல் எழுதி விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். சென்றது முதல் வந்தது முதல் கோர்வையாக ஏதோ ஒரு சமயத்தில் உள் வாங்கி உணர்ந்து பாருங்கள்.
அவஸ்யம் எழுதுங்கள்.
இந்த ஆசைகள் அத்தனையும் போய்விட்டது. காரணம் புரியும் உங்களுக்கு?
நன்றி
கார்த்திக்
ஜோதிஜி ....நீங்கள் சொல்வது ரொம்ப சரி, டீச்சர் எழுதிய பதிவு அத்தனையும் பொக்கிஷம் ...நான் வழக்கம் போல சொதப்பிட்டேன் :-(
கருத்துரையிடுக