CA பரிச்சை என்றால் சும்மாவா , ரொம்ப கஷ்டம் அப்படின்னு சொல்வேன்னு தானே எதிர்பாத்தீங்க ....கஷ்டம் எல்லாம் கிடையாது, ஆனால் அடிக்கடி பெயில் ஆகணும் ..பெயில் ஆனா சோகம் தானே ... அதுக்குகாக உக்காந்து அடிப்பாங்க. நான் அப்பவும் ( பெயில் ஆனப்பவும் ) அதை தொட்டது கிடையாது , CA pass ஆகாம அதெல்லாம் சாப்பிட கூடாதுன்னு ஒரு கொள்கை ...ஆனா, இந்த பாழாய் போன CA அவ்வளவு சுலபம் கிடையாது, அப்பொழுது என் நண்பன் ஒருவன் வீட்டிற்கு அடிக்கடி போவதுண்டு, அவன் அண்ணன் air -force இல இருந்ததால் எப்பவும் பாட்டில் இருக்கும் , நிறைய நாள் நானும், என்னை போல் வேறு ஒரு நண்பனும் தினம் அவர்கள் வீட்டுக்கு போவோம் ... பின் மூன்று பெரும் சில சமயம் அங்கு உள்ள கமல் தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு ஒரே கட்டிலில் ( நாங்க மூணு பேர் மட்டுமே !!!!!) படுத்து உறங்கவோம். ..( அது ஒரு கனா காலம் )...

நான் பள்ளியில் படித்த காலத்தில் ... யாராவது பீடி /சிகரெட் குடித்தாலே அது தான் மெயின் நியூஸ் , மொத்தப் பள்ளியில் ஒரு ரெண்டு அல்லது மூன்று பேர் அது போல் இருப்பார்கள், அவங்களை எல்லாம் அண்ணாந்து தான் பார்ப்போம் .
கல்லூரி வாழ்க்கையிலும் , அந்த பக்கம் போகலை, கையில் அவ்வளாவாக காசு புழக்கம் கிடையாது ( ஏன்டா பொய் சொல்ற - காசே கிடையாது ) .. தஞ்சாவூர் கிராமத்தில் இருந்து வரும் சிலர் சரக்கு அடிப்பார்கள் ..
கல்லூரிக்கு பிறகு , அந்த CA நாட்களில் , என் நண்பன் CA பாஸ் செய்து விட்டான், அதற்காக ஒரு பெரிய பார்ட்டி , ஆனால் நான் இன்னும் பாஸ் ஆக வில்லை ஒரு குரூப் பைனலில் இன்னும் பாக்கி இருந்தது. கொள்கையை தூர போட்டுவிட்டு நானும் தொடங்கினேன். முன்ன பின்ன குடித்து கிடையாது , பீர் , விஸ்கி எலாம் பயங்கர ஸ்மெல், எனவே வயதான துறவியை நாடினேன் (Old monk) ... அதுல நிறைய ஐஸ் போட்டு, தமஸ் அப் கலந்து சும்மா பூந்து விளையாடினோம். எம் ஜி ஆர், பாட்டு ( நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு - ஆட்டமுடன் , ஆயிரம் நிலவே வா சோகமுடன் ) எல்லாம் பாடி- என்னுடைய நண்பர்கள் எல்லாம் தமிழ் தான் என்றாலும் - நிறைய பேர்களுக்கு தமிழ் பேசுவது கூட ததிங்கினத்தோம் ... ஒரு மாதிரி, ஜின், வோட்க்கா எல்லாம் குடித்தாலும் எப்பவும் நம்ப வோட்டு ஓல்ட் மாங் தான்.
முன்பெல்லாம் பார்ட்டி முடிந்து காரை ஒட்டி கொண்டு வந்திருக்கிறேன், எனக்கெனவோ ஒரு நினைப்பு , குடித்தால் நன்றாக கார் ஓட்ட முடியும் என்று ஆனால் இப்போல்லாம் அப்படி செய்வது கிடையாது , முதல் காரியம் அவளவாக பார்ட்டிகள் கிடையாது , அப்படியே போனாலும் குடிப்பது கிடையாது, அப்படியே எப்பவாவது சரக்கு அடித்தால் டாக்சி தான்.
ஒரு முறை ஆபிசில் இருந்து நண்பர்கள் எல்லாம் ஷார்ஜாவில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க போனோம், இந்தியாவும் , சிறிலங்காவும் விளையாடின மேட்ச், தொடங்கும் முன்பே, ஒரு வீட்டுக்கு போய், நிறைய பெப்சி பாட்டில் எல்லாம் வாங்கி, அதில் உள்ள பெப்சியை சிறிது கொட்டிவிட்டு, அதில் துறவியை ( old monk ) நிரப்பினோம் ... அதை அழகான ஒரு ஒரு பையில் வைத்து கொண்டு போனோம், ...
ஸ்டேடியம் வாசலில் பெரிய வரிசை , வரிசையாக ஆட்கள், எல்லாரையம் சோதித்து அவர்களிடம் உள்ள பாட்டில்கள் ( கோக், பெப்சி )..மற்றும் மற்ற பைகளையும் வாங்கி வைத்து உள்ளே அனுப்பினார்கள், என்னுடைய முறை வந்த பொழுது, என் பையை பார்த்தார்கள், இதை இப்பிடியே வைத்து விட்டு நீங்கள் உள்ளே போகலாம் என்று சொன்னார்.. ஏன்னு கேட்டப்ப , கல்கத்தா மைதானத்தில் அண்மையில் குப்பிகள் / கல் / ...வீசியதில் , விளையாட்டு வீரர்களுக்கு அடி கூட ஏற்பட்டது, அதனால் தான், உங்கள் கிட்ட பெட் / பிளாஸ்டிக் போன்றவை எடுத்து செல்லலாம் , ஆனால் கண்ணாடி குப்பிகள் நோ .... எனவே கொண்டு போயிருந்த குப்பிகள் உள்ள பையை அங்கேயே வைத்து விட்டு போனோம்
கொஞ்ச நேரம் ஆனவுடன் எனக்கு திருப்பி போய் அந்த பையை எடுக்கலாமா? என்று தோனியது, இப்போ அங்கே அவ்வளவாக கூட்டம் இலலை , முன்பு இருந்த அரபி போலீஸ் காரர்கள் அங்கு இலலை, நம்ம லோக்கல் சேட்டன் மார் தான் இருந்தார், அவரிடம் நான் இங்கு விட்டு விட்டு போன ஒரு ஆரஞ்சு கலர் பை எங்கே என்று கேட்டேன், ..... தம்பி உடனே இங்கிருந்து ஓடிவிடு, அந்த பையை தேடி யாராவது வந்தா இங்க கொண்டுவான்னு ஒரு ஆபிசர் அங்கே வெயிட் பண்றார்... நான் ஏன் இன்னும் அங்கே நிக்கறேன், விடு ஜுட்......
டெல்லியில் இருந்து பின் பெங்களூருக்கு மாற்றம் , பெங்களூரில் நிறைய குடித்தது காபி தான் . எப்பவாவது சில சமயம் கொஞ்சம் தீர்த்த வாரி. பின் அங்கிரிந்து பம்பைக்கு போனோம் ,
மும்பையில் , நான் வேலை செய்த கம்பெனியில் அடிக்கடி பார்ட்டி உண்டு, அனால் ஒரே ஒரு பிரச்னை தான், ஒரு முறை போன ஓட்டலுக்கு திரும்பவும் பார்ட்டி நடத்த அனுமதி தர மாட்டார்கள், நாங்க தான் அங்கே இருக்கிற சாமானை எல்லாம் உடைச்சிட்டு , சில சமயம், ஆசாமிகளையும் சாமான் மாதிரி நினைத்து ஏதாவது சில அவயங்களை டாமேஜ் செய்து !!!!!..... அப்பறம் எப்படி அனுமதி கிடைக்கும்.
பின் துபாய் வந்து சேர்ந்தேன், இங்கும் வெகு சில சமயங்களில் மட்டும் பார்ட்டி, ஆனால் இப்போல்லாம் குடிப்பதில் துளியும் நாட்டமில்லை. ...நம்புங்க ( வயசானதுக்கு அடையாளம் !!!!!)
*********************************************************************
எனக்கு வந்த ஒரு மெயிலின் தமிழாக்கம்
ஒரு ஆசிரியை தன்னுடைய மானவர்களுக்கு ஒரு கட்டுரை போட்டி வைத்தால் - கடவுள்
உங்கள் முன் தோன்றினால், நீங்கள் என்ன கேட்பீர்கள் , ஏன் என்று ஒரு கட்டுரை போட்டி வைத்தார்
அந்த கட்டுரைகளை திருத்தும் பொழுது , இந்த கட்டுரையை படித்தவுடன், கண்களில் நீர் முட்டி .... அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த கணவன் அதை காண, ...என்ன ஆச்சு என கேட்க, ஆசிரியை அந்த கட்டுரையை எடுத்து கொடுத்தார் ..
அப்படி அதுல என்ன எழுதி இருக்கு

கடவுளே , உங்க கிட்ட ஒரு ஸ்பெஷல் கோரிக்கை ..
என்னை டெலிவிஷனாக மாற்றி விடவும், எங்கள் வீட்டில் அதற்க்கு உள்ள இடம் எனக்கு வேண்டும் , எப்போதுமே டிவிக்கு நல்ல தனி இடம், மிகவும் பிரதான்யமான இடம், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் நான் வாய் திறந்தால் , கவனமாக கேட்கிறார்கள், உடம்பு சரி இலலை என்றால் ( ரிப்பேர் ) எனக்கு தனி கவனிப்பு, அப்பா வீட்டுக்கு வந்துவுடனே எனக்கு தனி கவனிப்பு, என்னுடைய அம்மாவும், எப்பொழுதெல்லாம் வருத்தமாய் இருக்கிறாரோ என்னிடம் தான் வருவார், என் சகோதரர்களும் என்னை கொண்டாட சண்டையே போட்டுக் கொள்வார்கள் , மொத்த குடும்பமே எல்லா வேலையையும் விட்டு விட்டு என்னிடம் வர போட்டி போடுவார்கள் . கடைசியாக - நான் எல்லாரையும் சந்தோஷப் படுத்த முடியும் .
எனக்கு டிவியாக மாற வேண்டும்
இதை படித்த அந்த கணவர், " அட கடவுளே, யார் வூட்டு புள்ளையோ பாவம் - என்ன கொடுமை கார பெற்றோர்கள் " என்றார்.
அழுது கொண்டிருந்த மனைவி கணவனை பார்த்தார் - " இது நம்ம பையன் எழுதியதுங்க " ...

7 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:
ம் ஃபைனல் டச் !!
:-)
அந்த லெட்டர் soooper டச்சிங்
அட அட அட... சுந்தர் சார்...உங்களுக்குள்ளே இப்படி இளைஞன் இருக்கறதை சொல்லவே இல்ல :)) துறவி ஆளு எப்படி சார்?
கட்டுரை மேட்டர் டச்சிங் ஆனா கொஞ்சம் ஓல்டு...
இந்த பாட்டிலை பார்த்தவுடன் பல விசயங்கள் மனதிற்குள் வந்து போகின்றது. வகையில் கூட இத்தனை ஒற்றுமை கூடாது சாமி. வெளியில் இருந்து படித்த போது மிகுந்த ஆச்சரியமாய் இருந்தது.
தொலைக்காட்சி உவமை முற்றிலும் உண்மை. அடித்தட்டு மக்களுக்கு கலைஞர் வழங்கியதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் இதற்கு பின்னால் உள்ள பல விசயங்கள் நண்பர் அழைத்து பேசிய போது ஜார்கண்ட் பிரச்சனையை தீர்க்க ஐயாவின் இந்த இலவசத்தை விரைவில் அங்கே பயன்படுத்த எண்ணம் இருப்பதாக சொன்னால் நம்புவீர்களா?
Nice one, thanks for sharing- in the profile yr profession says Biology related,
நன்றி
மின்னலு ,
பென்னி,
அப்துல் காதர்
பிரதாப் அண்ணே,
ஜோதிஜி
ராம்ஜி யாஹூ
கருத்துரையிடுக