அது ஒரு கனா காலம், கல்யாணம் ஆன புதிது, பெங்களூர் வாசம், எல்லாரும் என்ன செய்றீங்க , எங்க வேலை என்று கேட்டால், நான் ப்ராக்ட்டிஸ் பண்றேன்னு சொல்வேன் ( CA பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தேன் ) ...
வீடு ரொம்ப சிறிய வீடு , ஆனால் எப்போதும் உறவினர்கள் / நண்பர்கள் கூட்டம் உண்டு. கவாசாகி பைக் இருந்தது, நல்ல சூடான இட்லி, வடை, அடிக்கடி பை டு காபி ( 1 /2 காபி ) .... வார இறுதியில் மனோரஞ்சன் என்கின்ற ஒரு Air- Force திரை அரங்கில் நிறைய சினிமா ... வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் இம்மி பிசகாமல் அதே வாழ்க்கை வாழ வேண்டும்.

அப்பெல்லாம் இளநீர் நிறைய கிடைக்கும், அது நிறைய குடிக்கும் பழக்கம் இருந்தது ( பீர் குடிக்க மாட்டேன் !!!!!) ...
என் மனைவி IATA பரிட்சை பாஸ் பண்ணியதால், பெங்களூர் K .C . தாஸ் என்கிற ஸ்வீட் கடையில் இருந்து ரெண்டு கிலோ சோன் பாப்படி வாங்கினேன் , அந்த சோன் பாப்படி கல்கத்தாவில் செய்து , விமானம் மூலம் பெங்களூரு வரும் என்று கேள்வி, எவ்வளவு உண்மை என்று தெரியாது.

ஒரு சில பேருக்கு கொடுத்தது போக ஒரு ஒன்றரை கிலோ மீதி இருந்தது, அன்று இரவு, தனி ஆளாக எல்லா சோன் பாப்டியை காலி செய்தேன், ...விடியற் காலை முழிப்பு வந்தது, ஆனால் காலை அசைக்க முடியவில்லை, கையை அசைக்க முடியவில்லை, போர்வையை எடுத்து போர்த்தி கொள்ள முடியவில்லை, கொஞ்சம் பேசமால் படுத்து இருந்தேன், தெரிந்த பாடல் வரிகளை பாடி பார்த்தேன்.... மனம் /மூளை எல்லாம் ஓகே ஆனால் கால் /கை இம்மி கூட அசைக்க முடியவில்லை ...இப்படியே இருந்தா அவ்வளவு தான், இனி மனைவியிடம் சொல்லிட வேண்டியது தான்னு குரல் கொடுத்தேன்,

அசைய முடியாம இருந்த என்னை அப்படி பார்த்தவுடன் அழ ஆரம்பித்து விட்டாள் , மாமனாரும் அன்று வீட்டில் தங்கி இருந்தார், என்ன சத்தம் என்று அவரும் வந்தார், ..... எனக்கு ஒன்னும் இலலை, ஞாபக சக்தி எல்லாம் நல்லா தான் இருக்குன்னு சொல்லிட்டு ... பார்முலா ஒன்னு , (a+b)2 = a2 +b2 + 2ab ன்னு சொல்றேன் , அவ்வளவு தான் இவருக்கு என்னோவோ ஆச்சுன்னு , மனைவி இன்னும் கொஞ்சம் அழரா,
நிக்க கூட முடியாது, ரெண்டு கையும் / காலும் கிட்ட தட்ட பராலிசிஸ் வந்தா மாதிரி ... அப்படியே தூக்கி கொண்டு போய் ஒரு வழியா ஆட்டோவில் ஏற்றி, ஆஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தார்கள், காலை நேரம் என்பதால் அப்போதுள்ள டாக்டர், ஒரு ட்ரிப் ஏத்த சொல்லிவிட்டு போய் விட்டார், அடுத்த டாக்டர் வர ஒரு 9 மணியானது , அவர் வந்தவுடன் சில பரிசோதனைகள் செய்தார், ஆனால் இப்போது என்னால் நிற்க , நடக்க முடிகிறது , என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.... படுத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்த நான், சாதரணமாக நடந்து வெளியே வந்தேன் ...இருந்தாலும் அந்த சோதனைகளில் , எனக்கு பொட்டாசியம் அளவு குறைந்ததால் இப்படி இருக்கலாம் என்றும், பொட்டாசியம் சாப்பாடு மூலம் கிடைப்பது மிக கடினம், இளநீர் மற்றும் வாழை பழத்தில் பொட்டாசியம் உண்டு என்று சொன்னார்.
அது அப்படியே போச்சு, ஆனால் அப்போப்போ இளநீர் மட்டும் நிறைய குடித்து கொண்டு வந்தேன்,
எங்கள் வீட்டில் தங்கி ப்ராஜெக்ட் வொர்க் செய்த , எங்கள் கசின் கல்யாணம் நிச்சயம் ஆகியது, அதற்க்கு பார்ட்டி கொடுத்த பொழுது, சிம்பொனி சினிமா ஹால் அருகே ஒரு ஐஸ் கிரீம் கடைக்கு போனோம், அந்த மெனு கார்டில் என்னென்னமோ ஐட்டம்ஸ் எல்லாம் இருந்தது , எப்பவும் போல நம்பளோட வழக்க படி, இருக்கறதிலேயே ஜாஸ்தி விலை உள்ள Death by Chocalate ங்கிர ஒரு ஐஸ் கிரீம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன் ( முன்ன பின்ன கேள்வி பட்டது கூட கிடையாது - விலை ஓன்று தான் குறி நமக்கு )

அதுல ரெண்டு பெரிய சாக்லேட் பேஸ்ட்ரி , அதன் மேல் ரெண்டு கரண்டி வனிலா ஐஸ் கிரீம், அதன் மேல வழியும் தேன், அப்புறம் அதன் மேல் தூவி விட்ட ட்ரை ப்ரூட்ஸ்.... அப்போ அதன் விலை 78 ரூபாய்ன்னு நினைக்கிறேன் ... அதை புல்லா சாப்டறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டேன் ..அது ஒரு சுகமான சுமை.
அன்று இரவே என் மனைவி கல்யாண கோஷ்டியுடன் போய், புடவை வாங்க சென்னை போனாள், நான் தனியாக வீடு வந்து சேர்ந்தேன்... அவ்வளவு தான் காலையில் எழும்ப முடிய வில்லை, யார் /எப்படி கொண்டு போனார்கள் என்று சரியாக ஞாபகம் இலலை, வீடு பக்கத்தில் உள்ள ராமையா மருத்துவ மனைக்கு போனோம்,
ராமையா மருத்துவமனை, மெடிக்கல் காலேஜ் , இன்ஜினியரிங் காலேஜ் எல்லாம் சேர்ந்து இருக்கும், ரொம்ப பெரிய இடம், என்னை அட்மிட் பண்ணிய ரூம் என் வீட்டை விட குறைந்தது ஆறு மடங்கு பெரிது, ரூம் உள்ளில் தூண்கள் எல்லாம் வரும். நான் மட்டும் தனி ஆள்,

கட்டிடம் கட்டி கொண்டிருந்தால் ராமையாவின் ஆயுளுக்கு ஒன்றும் நேராது என்று யாரோ ஒரு ஜோஸ்யர் சொன்னதால் , எப்போதும் கட்டிட பனி தான், அவரோட வீடு கூட விதான் சௌதா மாதிரி இருக்கும் .... ராத்திரி அவ்வளவு பெரிய ரூமில் தனியாக இருந்ததால், ஒரு மாதிரி பயம் வந்து , பயத்திலேயே தூங்கி விட்டேன், முழித்து பார்த்தால் ரூம் உள்ள இரண்டு புதிய தூண்கள் !!!!!!
அவர்களும் என்னோவோ டெஸ்ட் எல்லாம் செய்தார்கள், என் கண் கொஞ்சம் பெரிதாக , வெளியே தள்ளி இருப்பதால் ( அதாவது திருட்டு முழி !!!!!) தைராய்டு பரிசோதனையும் செய்தார்கள் , அதற்க்கு அவர்கள் வசூலித்த பணம் ருபாய் ஐந்து மட்டுமே .....அந்த ரிப்போர்ட்டை வாங்க போன போது, ஒரு பேப்பர் எடுத்து ஏதோ கிறுக்கி, உங்கள்ளுக்கு தைராய்டு கிடையாது என்று சொல்லிவிட்டார்.
அவ்வளவு தான் வீட்டிற்கு வந்து விட்டோம், இப்போ சமையலில் , சாப்பாடில் நிறைய மாற்றம், ஸ்வீட் கிடையாது, இலை, தழை, பச்சை காய்கறி ..இப்படின்னு கொஞ்ச நாள் ஓடியது
வேலை மாறி மும்பை வந்தோம், இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு உறவினர் இதை பற்றி கேள்வி பட்ட பொழுது, ஸ்வீட் போன்றவை ஏன் சாபிடாமல் இருக்கணும், அதற்க்கான காரணம் என்ன ... இதெல்லாம் கண்டுபிடிக்க நல்ல மருத்துவரை போய் பார்க்கவும் என்று சொல்லிவிட்டு போனார்.
முதலில் ஒரு நியூரோ மருத்துவரிடம் போனோம், எல்லாம் சரியாய் இருக்கு என்று சொல்லிவிட்டு ஒரு என்டோகார்ணலாஜி மருத்துவரிடம் அனுப்பினார்.
அவர் இந்த இந்த டெஸ்ட்களை மும்பை ஹிந்துஜா ஆஸ்பிடல் போய் செய்து வரவும் என்று சொன்னார். அதே தைராய்ட் டெஸ்ட் தான், ஆனால் அதற்க்கான கட்டணம், கிட்ட தட்ட ஆயரம் ருபாய் , இப்போ இதில் தைராய்டு உள்ளது - என்று ரிப்போர்ட் சொல்லியது
இதனால் தெரிந்து கொண்டது
(1)ஒன்றரை கிலோ ஸ்வீட் எல்லாம் தனியாக ஒரு ஆள் சாப்பிட கூடாது -
(2)மெனு கார்டில் உள்ள ஐட்டத்தின் விலையை விட எது வேண்டுமோ அதை வாங்கி சாப்பிடனும் -
(3)ஐந்து ருபாய் டெஸ்ட் க்கும் , ஆயரம் ருபாய் டெஸ்ட் க்கும் குறைந்த பட்சம் ஆறு வித்யாசம் உண்டு.


எனக்கு வந்த ஒரு மெயில்..
இளவரசர் சார்லஸும் , ஒரு சர்தாரும் உணவருந்தி கொண்டிருக்கிறார்கள் ... இளவரசர், சர்தார்ஜியை பார்த்து, PLEASE PASS ON THE WINE YOU DIVINE ன்னு சொல்றார் , சர்தார்ஜி உச்சி குளிர்ந்து போய் அதை எடுத்து கொடுக்கிறார் , நீங்கள் சொல்வது ஏதோ ஒரு கவிதை போல் சுகமாக இருக்கிறது ... மனத்தில் ஏதோ கணக்கு போடுகிறார், மேசையில் இருப்பதை எல்லாம் ஒரு தரம் பார்கிறார், பின் தனக்குள் ஏதோ சிரிக்கிறார்.... சிறிது நேரம் கழித்து இளவரசரை பார்த்து PLEASE PAAS THE CUSTARD YOU BASTARD $#@%*&

32 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:
அருமையான பதிவு... சர்தார்ஜி ஜோக் நல்லாயிருந்தது..
கனாக் கால நினைவுகள் பயமுறுத்தியது :-). நிறைய இனிப்பு சாப்பிடாதீர்கள். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை உறுதிப்படுத்திய பதிவு.
நல்ல பகிர்வு, ஸ்வீட் எப்பவுமே டேஞ்சர்தான்
ஒன்றரை கிலோ சொமபப்டியை நீங்கள் ஒரே ஆளாக தின்றதை டாக்டரிடம் சொன்னிர்களா?
சாக்லேட் ஐஸ் க்ரீம் தின்றதையும் சொன்னிர்களா ?
எதுனால அப்படி ஆச்சுன்னு அவங்க சொல்லவே இல்லையா? எப்படி விட்டாங்க? ஹ்ம்ம்.. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தானே? சரிதான்.
நன்றி இர்ஷாத் பாய் ,,,உங்களோட அந்த அரபி தெரியுமா ????? அருமையான ஜோக். இங்கே, இந்த வெள்ளைக்கார பசங்களுக்கு சம்பளம், கார், மரியாதை எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தி தான், மூணாவது தான் படிச்சிருப்பார் , பெரிய மேலாளரா இருப்பார்...ஏன்டா இப்படின்னு கேட்டா, அவரு தான் நல்லா இங்கிலீஷ் பேசராறேன்னு சொல்வாங்க சிலபேரு !!!!!!.
வாங்க. ஜெசிலா அக்கா அளவுக்கு மிஞ்சினால் ..உண்மை தான் ...எனக்கு வந்த அந்த டெக்னிக்கல் விஷயத்தை சரியாக சொல்லவில்லை ( எப்போ ஒழுங்கா சொல்லிருக்கேன் ????) ... பொட்டாஷியம் குறைவால் ஏறப்பட்டது அது... ஆந்திராவில் , கோடை காலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள நிறைய பேருக்கு இது மாதிரி ஆகுமாம், ... உண்மை , அது ரொம்ப பயங்கரம் தான், ஆனால் அதை பயத்துடன் எதிர் கொள்ளவில்லை என நினைக்கிறேன்
மாணிக்கம் அண்ணே ... அதை டாக்டர் கிட்டே சொன்னேன் , சர்க்கரை வியாதி இருந்தால் ஸ்வீட் சாப்பிட கூடாது... ( இப்ப வந்த்டுச்சு ???), எனக்கு தெரிந்த நிறைய நபர்கள் நல்லா ஸ்வீட் சாப்பிடுவாங்க, ஸ்வீட் சாப்பிட்டா இது மாதிரி ஏன் வந்தது என்ற கேள்விக்காக தான் மும்பை டாக்டரிடம் சென்றேன் .... ஹைபர் தைராய்டு என்று முடிவாகியது
வாங்க அனன்யா மேடம் , மேலே சொன்ன விளக்கங்கள் போதும்ன்னு நினைக்கிறேன் ....பொட்டஷியம் குறைவு , அதற்க்கான காரணம் ஹைபர் தைராய்டா இருக்கலாம் - இப்போ தைராய்ட் போச்சு - சுகர் வந்தாச்சு !!!!( கத்தி போச்சு வாளு வந்த கதை தான் )
//விலை ஓன்று தான் குறி நமக்கு//
எப்படி இருக்கிறீர்கள்?
இந்த வியாதி மட்டும் எனக்கும் கொஞ்சம் உண்டு.
//கத்தி போய் வாளு வந்த கதைதான்//
சோன் பப்டி 1 1/2 கிலோ சொல்லும் போதே நினைச்சேன்:) ஏன்னா ஒருத்தரு திருப்பதி போயிட்டு லட்டு வீட்டாருக்கெல்லாம் கிலோ கணக்கில் வாங்கிட்டு பயணத்தில் ஒவ்வொன்னா சாப்பிட வீட்டுக்கு கொஞ்சம் தூரம் வரும்போது ஒரே லட்டு மட்டும் மீதமிருந்து அதையும் சாப்பிட்டு நாள் தொட்டு இன்று வரை சர்க்கரை விட்ட பாடில்லை.
வணக்கம் ஐயா , ( கோச்சுக்க மாட்டீங்களே )
உங்களோட இடுக்கை எல்லாம் பார்ப்பேன் , ஆனா ராஜாவுக்கு வக்காளத்து வாங்கிறது எல்லாம் கொஞ்சம் ஓவரு .... இலங்கை ஒரு புரியாத புதிர் போல ஆகிவிட்டது , ( அர்மேனியா வுக்கு கூட விடிவு காலம் தெரிகிறது )...
நான் நடுவுலே அவ்வளவா எழுதல, இப்போ ஏதோ அது இதுன்னு பிலிம் காட்டறேன் ...
வருகைக்கு நன்றி
கொஞ்ச நஞ்சமா ஒன்றரை கிலோ இனிப்பு சாப்பிட்டா தாங்குமா சார்?? யாரு சாப்பிட்டாலம் இந்த நிலைமைதான்னு நினைக்கிறேன்... எதுவா இருந்தாலும் அளவா இருந்தா தப்பில்லை என்ன சொல்றீங்க... :))
சரிதான், ஒன்றரை கிலோ சோன் பப்டியும், ஒரு கிலோ ஐஸ்க்ரீமும் சாப்பிட்டதாலே வந்ததா?? ம்ம்ம்ம்ம்???? அந்த சோன் பப்டியை வச்சிருந்து ஒரு நாலு நாளைக்குச் சாப்பிட்டிருக்கலாம். போகட்டும் இப்போ உடம்பு நல்லா இருக்கு தானே? கவனமாய் இருங்க. ஸ்வீட் சாப்பிட்டு இப்படி ஆகும்னு இப்போதான் தெரிஞ்சுண்டேன். :(((((
thodara
K.C.தாஸா? நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.. :-)
SIr,
Your problem may be due to Acrylamide toxicity. Acrylamide is present in sweets that is created during high temperature while preparing. Acrylamide may interfere K+ (potassium) transport.
Roshma
நன்றி பிரதாப் ... ஜாஸ்தி ஸ்வீட் சாப்பிடகூடாது , இது அடிப்படை விதி, ஆனால் ஜாஸ்தி ஸ்வீட் சாப்பிட்ட எல்லாருக்கும் இது வருதா? வருமா ? இது தான் கேள்வி , அந்த கேள்வி சரியாக இந்த பதிவில் வரவில்லை என்றால் அது என்னுடைய குற்றேமே ... கிழே பாருங்க ரோஷ்மா அவர்கிளிட்ம் இருந்து சரியான விளக்கம் வந்துள்ளது
வாங்க கீதா சாம்பசிவம், நீங்க தாமிரபரணி பற்றி எழுதிய போது தான், திருப்புடை மருதூர் , பிரம்ம தேசம் கோவில்கள் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது ... இப்போ உடம்புக்கு ஒன்றும் இல்லை, ஸ்வீட் சாபிடற எல்லாருக்கும் இப்படி ஆகாது ... பொட்டாசியம் குறைந்தால் இப்படி ஆகலாம் - இது தொடர் இல்லை, ஒரு மாதிரி அப்படி இப்படி மாறி மாறி எழுதுவேன்
வாங்க ஜெய் ... நல்லா சாப்பிடுங்க ஆனா நிறைய சாப்டாதீங்க
Thanks Reshma , for bringing the clarity to the problem that was, normally hyper thyrodism is a life long condition- but for me after 5 or 6 years it has gone, - after it has gone, after about 2 years I got Diabetis - not a big worry, I am OK ...
நன்றி ரேஷ்மா, இது வரையிலும் தெரியாத தகவல், இனி ஸ்வீட் சாப்பிடும்போது, அதுவும் கடைகளில் வாங்கும் இனிப்புகள் சாப்பிடும்போது கவனமாய் இருக்கலாம்.
நா பாக்கிஸ்தானி ஸ்வீட் (எல்லாமே ப்யூர் வென்னையில் செய்தது)ஒரே தடவையில ஒன்னரை கிலோ சாப்பிட்டும் ஒன்னும் ஆகலயே !!.
இங்கு ஒரு கேரளா நன்பருக்கு எப்ப முருங்கக்காய் சாப்பிட்டாலும் உடனே அலர்ஜி ஆகிவிடும் . எனக்கு தயிர் அலர்ஜி . அது மாதிரி ஒரு வேளை இருக்கும் .
நிறைய புதிய நண்பர்கள் அதிக உருப்படியான விமர்சனங்கள் தேவைப்படும் விசயங்கள் எப்போதும் போல மனதில் உள்ளதை மறைக்காத மர்மங்கள்?
நல்ல காலம் எனக்கு ஸ்வீட் அவ்வளவா பிடிக்காது! ஆனா ரொம்ப வினோதமா இருக்கு.. இப்படி ஒரு விஷயம் நான் கேள்வி பட்டதே கெடயாது! ஆனா.. இந்த சம்பாவத்திலிருந்து நீங்க தெரிந்து கொண்ட விஷயங்கள்-- என்ன வென்று சொல்ல! :D
ஆனாலும் ஒன்றரை கிலோ சோன்பப்டி - - டூமச்
two explanations...
Dangers Associated with and Diseases Triggered or Caused by Eating Disorder Behaviors
Paralysis - transient (or temporary) paralysis -- extreme weakness of muscles or not being able to move at all -- Caused by low levels of potassium, and/or the degeneration of nerve cells, in the spinal cord or in the brain, which have been deprived of essential nutrients. Left untreated, periods of paralysis may happen more frequently and more severely, lead to permanent muscle weakness..
2nd explanation
Thyrotoxic periodic paralysis(தைராய்டு அதிகமானால் வரக்கூடிய ) is an acquired form of hypokalemic(சோடியம் குறைவதால் ) periodic paralysis and is most common in Asian males. but theories include increased Na-K-ATPase activity, which has been found in patients with both thyrotoxicosis and paralysis.
ref:
http://emedicine.medscape.com/article/242008-overview
Dr.ராம் , மிக்க நன்றி .... இப்போதைக்கு அந்த பிரச்னை இல்லை என்றாலும், எதனால் வந்தது என்று ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது . உங்களை இங்கு அழைத்து வந்த டாக்டர். ப்ருனோவுக்கும் நன்றி
திரு.சுந்தர ராமன்,
வியாதியாலே அவஸ்தைப்பட்டதை கூட
நகைச்சுவை உணர்வோடு நீங்கள்
விவரித்திருக்கும் விதம் அருமை!
அதிலும் ஏ பிளஸ் பி ஹோல் ஸ்கொயர்
படம் ரொம்ப பிரமாதம். இயல்பான
எழுத்து, பெங்களூர் 1/2, 2/3 காபி போல
சவுதியில் 15 வருடம் பணி புரிந்த
அனுபவத்தில், பாஸ்போட்டு நிறத்துக்கு
ஏற்ப சம்பளம் மாறுவதையும் அறிவேன்
arumaiyaana anupava pakirvu sir!!,,:)
கருத்துரையிடுக