ஞாயிறு, 30 மே, 2010

மாப்பிள்ளை தோழனும் தெரட்டிப்பாலும்



கல்யாண மணமகன் , மணமகள் நடுவில் மாப்பிள்ளை தோழன் (!!!???)


எங்களுக்கு என்று சொந்த ஊர் இல்லை என்ற காரணத்தாலும், சாதரணமாக நிறைய ஊர் சுற்ற வாய்ப்பு வரவில்லை என்பதாலும், போன சில ஊர்கள், பங்கு பெற்ற கல்யாணங்கள் , விழா போன்றவை மறக்க முடியாத நினைவுகளாகி போகின...

முக்கியமாக ஏதாவது ஊருக்கு என்றால் , சாதரணமாக ரயில் பயணம் இருக்கும், எனக்கு மிகவும் பிடித்தது ரயில் பயணம், பகல் நேரத்தில் என் அப்பா கையை இறுக்கி பிடித்து எங்கேயும் போக விட மாட்டார், ஆனால் இரவில் எல்லாரும் உறங்கிய பின் , அந்த படியில் நின்று பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, அந்த சத்தமும், இருட்டும் , சில சமயங்களில் ஊரின் வெளிச்சமும் , நட்சத்திரங்களும் ... அது ஒரு கனா காலம் ( அப்பாடி எப்படியோ பதவின் பெயர் ஒவ்வொரு தடவையும் வந்திடுது - எவ்வளோ பாலச்சந்தர் சினிமா பார்த்திருப்போம் !!!!)

எட்டாவது லீவில், நாங்கள் நாகர்கோவிலில் உள்ள ஒழிகினசேரி என்ற கிராமத்திற்கு போனோம்... அழகான ஊர் , ப வடிவில் வீடுகள், நடுவில் பெரிய அரச மரம் மற்றும் வேப்ப மரம் ...புவனேஸ்வரி அம்மன் கோவில் , ஆறு ...ஆற்றுக்கு அந்த பக்கம் நிறைய வயல் , எப்போதுமே பச்சை பசேல், தொலை தூரத்தில் மலைகள் , ரொம்ப ரம்யமான சிறிய ஊரு .





ஒழிகினசேரியில் இருந்து தெரியும் சில காட்சிகள்



அந்த கால கட்டத்தில் நிறைய உறவினர்கள் ஒழிகினசேரியில் இருந்தார்கள் , யார் வீட்டுக்கு வேணுமானாலும் எப்போதும் போகலாம் , நீச்சல் தெரியுமாதலால் ஆற்றங்கரையும் உண்டு

அப்போது அங்கிருந்த என்னோட கசின் தாத்தாவிடம் ( ..ஒன்று விட்ட தாத்தா ) ஒரு புத்தக சாலை இருந்தது , வெத்தலை பெட்டியோட தடித்த கண்ணாடி போட்டு, கம்பீரமாக இருப்பார் , என்னோட பாதி பேரு அவரோட பெயரில் இருந்து வந்தது தான் ( சுந்தர்) , அந்த காலத்திலேயே டென்னிஸ் விளையாடினார் என்று சொல்வார்கள் , நான் பார்த்தபொழுது , கலர் கலர் டோக்கன் வைத்து சீட்டுக்கட்டு தான் விளையாடினார்.!!!.

ஊருக்கு போகும் வழியில் ஒரு பெரிய வீடு உண்டு - அது என்.எஸ்.கிருஷ்ணனின் வீடு என்று சொல்வார்கள் - பயோனியர் முத்து என்ற திரை அரங்கமும் அருகில் உண்டு ( அப்ப தான் இன்று போல் என்றும் வாழ்க - தலைவர் படம் பார்த்தேன் )

அங்கிருந்து , சுசீந்தரம் கோவில் பார்த்தது, கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனம் பார்த்தது, காந்தி மண்டபம், கோவில் ... அங்கு வாங்கிய அந்த கண்ணாடி துண்டுகளை குழல் மூலம் பார்க்கும் அந்த குழாய் நெடு நாட்களுக்கு என்னிடம் இருந்தது



எனக்கு ஒரு வகையில் அண்ணன் முறை உள்ள திரு ராமசுவாமிக்கு திருமணம் , நான் திருச்சி டவுன்ஷிப்பில் இருந்து போய் இருப்பதால் , அந்த கிராமத்து வீடுகள், அமைப்பு, எல்லாமே புதிது ... அந்த ஊர் பயலுவுகளும் , எலேய் , என்னலேய் ன்னு வார்த்தைக்கு வார்த்தை " லேய் " போட்டு பேசுவதை பார்க்கும் பொழுது ஒரு புது அனுபவம் எல்லாரும் எலும்பும் தோலுமாய் தான் இருப்பார்கள், பெரிய விளையாட்டு உபகரணங்கள் ஏதும் கிடையாது, ஆனாலும் எப்பொழுதும் விளையாடி கொண்டிருந்தோம் ..




அது மாதிரி ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும் பொழுது, நான் சொன்ன ராமஸ்வாமி வீட்டில், சமையல் அறைக்கு பக்கத்தில் ஓர் அறை உண்டு, சின்ன ஸ்டோர் ரூம் மாதிரி, ஜன்னல் கிடையாது, சிறியது, ஒரே பாத்திரமும், அரிசி , பருப்பும் இருக்கும் ... நான் அதில் ஒளிந்து கொண்டேன், யாரோ அந்த ரூமை வெளியில் இருந்து பூட்டி விட்டார்கள்.

அந்த காலகட்டத்தில் , எப்போவாவது சில சமயம், பிஸ்கட் சாப்பிட்டிருப்போம், ஐஸ் கிரீம் , மற்றும் கடையில் வாங்கிய ஸ்வீட் எல்லாம் பார்த்தது கூட கிடையாது, பண்டிகை காலங்களில் அம்மா செய்யும் அப்பம், பொறி உருண்டை , அவல் இதுவே நான் பார்த்த /உண்ட ஸ்வீட் வகைகள் - அம்மா நன்றாக மைசூர் பாகும் செய்வார்கள்

கல்யாண வீடு என்பதால், கல்யாணத்துக்கு உண்டான முறுக்கு, பட்சணம் எல்லாம் அங்கு தான் இருந்தது ... முதல்ல கொஞ்சம் முறுக்கு , அப்பறம் கொஞ்சம் மனோகரம் இதெல்லாம் சாப்பிட தொடங்கினேன் .. அப்பா தான் அந்த சின்ன எவர்சில்வர் சம்படம் கண்ணில் பாட்டது... திறந்து பார்த்தால் , அதில் தெரட்டிபால் ... ஆஹா அதை கொஞ்சம் சாப்பிட்டேன், அப்பறம் ஒரு எவர்சில்வர் தூக்கு இருந்தது, அதற்குள் சிவப்பு தெரட்டி பால் ... செமை ஜாலியா இருந்தது, அப்பறம் வேற எதுக்கோ யாரோ கதவை திறக்கும் பொழுது , வெளியில் போனேன் . கல்யாணத்துக்கு தெரட்டி பால் திரும்பவும் செய்தார்கள் என நினைக்கிறேன்




அந்த கல்யாணத்தில் நான் தான் மாப்பிள்ளை தோழன், எனக்கு ஐந்து ருபாய் கொடுத்தார்கள் , அம்மாவிடம் கொடுத்துவிட்டேன், என் நினைவுக்கு தெரிந்த வரை, அந்த காலத்துல எனக்கு கிடைத்த அதிக பட்ச ரூபாய் இது தான்.


இப்பொழுது கூட அதை நினைவில் வைத்து, ஒழிகினசேரியில் உள்ள என் மனைவியின் பாட்டி , ( என் தாயாரின் சகோதரியும் கூட ), தன மற்றுமொரு பேத்தியின் கல்யாணத்தில் செய்த தெரட்டி பால் கொடுத்தனுப்பினார்கள் .... ரொம்ப சுவையும் / அன்பும் கலந்திருந்தது .





திருச்சந்தூரில் என் மாமன் மகன் திரு ராம மூர்த்தியின் திருமணம்
இடது கோடியில் என் அம்மா , அப்பா , அப்புறம் மாமா , மாமி , மாமா பையன்கள் , நான், மற்றும் கல்யாண பையனின் சர்தார்ஜி நண்பன்





இப்போ படிச்சு, ஊரு விட்டு ஊரு வந்து, எங்கெல்லாமோ சுற்றும் வாய்ப்பு உண்டு, ஆனால் எப்போதுமே அந்த ஸ்வீட் சாப்பிடும் பொழுது அம்மாவின் நினைப்பு என்னை அறியாமல் வந்து விடும், அம்மா ஏதாவது கல்யாணத்துக்கு / விசேஷத்திற்கு போனால் கூட, இலையில் விழும், மைசூர் பாகு / லட்டு போன்றவைகளை புடவையில் முடிந்து வீட்டிற்கு வந்து எனக்கு கொடுப்பார்.

13 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:

அப்பாதுரை சொன்னது…

நிறைவைத் தந்த பதிவு.
திரட்டுப் பாலை 3டி கண்ணாடி போட்டுப் பார்த்தேன். பாக்கறதோட சரி.

ஜீவன்பென்னி சொன்னது…

திரட்டுப்பால்ன்னா என்ன சார்?

சுவையான் அனுபவங்கள்.சூப்பரா இருக்கு.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

:)

ஜோதிஜி சொன்னது…

இப்போது வார்த்தைகள் மற்றும் கோர்வை சற்று சரளமாக வந்துள்ளது.
கடைசியில் பாரா பிரிப்பதில் மட்டும் ஏனோ ஒரு அவசரம். துளசி தளம் போலவே படம் மாட்டியவிதமும் படத்தின் தெளிவும் அற்புதம்.

பசுமாடு கன்று போட்டதும் சீம்பால் சாப்பிட்டு இருக்கின்றேன். இதென்ன திரட்டிபால்?

இடுகைக்கு திருச்சி. பக்கவாட்டில் திருநெல்வேலி. ஆனால் வார்த்தைகளில் சொந்த ஊர் ஏதுமில்லை. சற்று குழப்பம்?

ஓழுகினசேரி பேரே ரொம்ப வித்யாசமா இடுகைக்கு தலைப்பா வைக்கலாம் போலிருக்கு????

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

அப்பாதுரை சார் வாங்க , உங்களை கூட மகிழவிக்க முடிகிறது என்றால் என் பாக்கியம் தான் , அதுவும் தெரட்டிப்பால் கொடுக்காமலே ... உங்கள் பக்கம் போயிருந்தேன், என்ன எழுத்து சார், அதுவம் யாரும் தொடாமல் இருக்கும் காமம் .... சான்சே இல்லை , ரொம்ப நல்லா இருந்தது .

வாங்க பென்னி சார், கவிதை எல்லாம் எழுதி போட்டு தாக்கறீங்க ... தெரட்டிப்பால் ஒரு வித ஸ்வீட் , பாலை சுண்டி சுண்டி தயாரிக்கபடுகிறது ( பால் கோவா மாதிரி ) - சிவப்பு தெரட்டிப்பாலில் தேங்காய் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன் - இதில் வெல்லம் அதில் சர்க்கரை.

நன்று சுவாமி

நன்றி ஜோதிஜி , ஏதோ படம் காட்றேன் ..நீங்க அதை போய் !!!!???? பதிவின் ஆரம்பத்லே சொன்னேன் , நமக்கு சொந்த ஊர்ன்னு ஒன்னு கிடையாது !!!!. நமக்கு எந்த ஊர் சார் ??? அப்படின்னு யாரவது கேட்டா ரொம்ப முழிப்பேன் , படிச்சது எல்லாம் திருச்சி பின டெல்லி , பெங்களுர் , மும்பை, & தற்சமயம் துபாய் ... இங்கு எல்லாம் முடிந்து , போதும் என்ற மன நிலை வந்தால் ( அது வந்துரும்ன்னு நினைக்கிறீங்க ... சான்சே இல்லை )... திருவந்தபுரம் அடுத்த தாமசமாக இருக்கலாம் .. எந்தா இது மதியா ?

சிம்மபாரதி சொன்னது…

super.. narration... you brought all your experiences live...

ஜோதிஜி சொன்னது…

திருவனந்தபுரம் சொன்னவுடன் திருவந்திபுரம் ஞாபகத்திற்கு வந்தது.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

சுந்தர் சார்... அருமையான மலரும் நினைவுகள்.

முதல் போட்டோவுல நீங்க உட்காந்திருக்கிறதே காமெடியாரு இருக்கு... அப்பவே இப்படித்தானோ??:)))

ஒழுகினசேரிக்கு இப்பபோய் பாருங்க... நீங்க சொன்ன மாதிரி எதுவும் இப்ப இல்லை. எல்லாம்
காங்கீரிட் காடுகள் ஆயிடுச்சு...ஆறு இருக்கு. நானும் சின்னவயசுல அங்கநிறைய குளிச்சுருக்கேன்.

அந்தப்பக்கம் இருந்த வயல் முக்கால்வாசி இப்போ வீடுகளாயிடுச்சு... பழைய அழகே போய்டுச்சு...
ஊர் ஞாபகம் வந்துடுச்சு...

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

வாங்க சிம்ம பாரதி சார் , நன்றி

ஜோதிஜி , திருவனந்த புரம் , எழுத்துலேயே சரியா வரமாட்டேன்கிது, ... இனி வரும் வாழ்கையில் வருமா ????!!!!

வாங்க நாஞ்சில் சார் , இந்த படம் எல்லாம் ( ஒழிகினசேரி) எடுத்து ரெண்டு வர்ஷம் ஆச்சு , இந்த தடவை ஊருக்கு போனா, ஒரு ரெண்டு நாள் பக்கத்ல போய் சுத்தி பாக்கனும்னு ஆசை.

ILA(@)இளா சொன்னது…

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

நன்றி சுந்தரராமன், உங்கள் வலைப்பூவையும் பார்த்தேன். தெரட்டிப்பால் சுவையாக இருந்தது. ஆர்.கே யின் மல்குடியை நினைவு படுத்தியது.

தக்குடுபாண்டி சொன்னது…

photos are very beautiful. if you like thirattipal, u can enjoy this below post also....:)

http://thakkudupandi.blogspot.com/2010/04/blog-post_16.html

Ranjhana சொன்னது…

Very beautiful memories.....is tat therittipal a resultant of my wedding ? .....nice to Ramaswamy Mama's wedding pic....rare collection. Keep writing more athimber ...........

கருத்துரையிடுக