வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மாதா, பிதா, குரு ..... தெய்வம்

வினவின் இந்த பதிவை பார்த்து மனத்தில் தோன்றியவை இங்கு கிளிக்கவும்.

படித்து முடித்ததும் மிகவும் கனமான ஒரு இன்னவென்று சொல்லமுடியாத ஒரு சூழ்நிலை உருவாகியது, பின் அவர் மேல் பெரிய கோவம் வந்தது, பின் சமூகத்தின் மேல், சிறிது நேரம் கழித்து, அந்த லிங்கத்தின் நிலையில் என்னை அமர்த்தி பார்த்தேன், நாம் இது போல் இருந்தால் என்ன செய்திருப்போம் , இதற்கு ஏதாவது பதில் உள்ளதா ... இப்படி பல விதமான கேள்விகள், எண்ண ஓட்டங்கள் ,

சாதரணமாக உடம்பு சரியில்லாமல் யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்தால் , அவரை பார்த்து விட்டு வந்துவுடன் உடனே நம்மை கொஞ்ச நாளுக்கு மாற்றிக்க முயல்வோம் , கொஞ்சம் சாப்பாட்ல , கொஞ்சம் நடைபயிற்சி , அது மாதிரி நிறைய சுய பரிசோதனையை கிளறி விட்டது இந்த பதிவு


எனக்கு இன்னுமும் அவர் மேல் அடங்கா கோபம், இப்படி வாழ்க்கையை தொலைத்து நடு வீதியில் நிற்கிறாரே என்று, முதலில், ஒன்பதாவது வகுப்பில் தோல்வி, இதெல்லாம் ஒரு தோல்வியா, நண்பர்கள் கேலியை பொறுக்க முடியவில்லையே என படிப்பை நிறுத்துவது மகா பாவம் . அந்த ஆசிரியர்களாவது மக்கு , உருப்படாது போறவனே என்று பிராண்ட் பண்ணாமல் , அனுசரணையாய் பேசி ஊக்க படுத்தி இருக்கலாம் . அது மாதிரி ஆசிரியர் கிடைக்காமல் போனது, இப்போது உள்ள ஆசிரியர்களின் மன நிலையை எடுத்து காண்பிக்கிறது.

எல்லாரும் படித்து என்ன செய்கிறார்கள் என்ற விதண்டா வாதத்துக்கு என்னிடம் பதில் இல்லை.

அவருக்கு ஆசிரியர் தான் கிடைக்கவில்லை ... வீட்டுக்கு அருகில் ஒரு நாலு நல்ல வார்த்தை சொல்ல , அவரை சரியான வழியில் செலுத்த உறவினர்களோ / நண்பர்களோ இல்லாது போனது , என்ன சொல்வது , அவரது துரதிர்ஷ்டமே ... சாதரணமாக, மாவட்ட விளையாட்டு போட்டி, ஸ்டேட் லெவல், இதிலில் பங்கெடுப்பவர்கள் , அந்த உடற்பயிற்சி ஆசிரியரிடம் மிகுந்த மரியாதையுடன் இருப்பார்கள் ... இவர் யார் சொல் பேச்சை கேட்கவில்லையோ , இப்படி படிப்பை நிறுத்தினார்.

ஒன்பதாவது தோல்வி எல்லாம் ஒரு பெரிய தோல்வியே இல்லை, ( சரியாக சொன்னால் எதுவுமே ஒரு பெரிய தோல்வி அல்ல ) அதற்க்கு துவுண்டு விடுவது, வீட்டை விட்டு ஒரு இலக்கு இல்லாமல் ஓடுவது ..அது ஒரு சரியான வழி அல்ல. ..

நான் என்னோட பள்ளி இறுதியில் வெறும் 60% தான் வாங்கினேன், என் கூட படித்தவர்கள் எல்லாம் பாலிடெக்னிக் படிக்க போனார்கள் , எனக்கு அந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ITI யில் கூட இடம் கிடைக்காது.. எப்படியோ , என்னவெல்லாமோ நடந்து, இறுதியில் அரசினர் கலை கல்லூரியில் PUC - வணிக பிரிவில் சேர்ந்தேன் ...எப்படியோ இன்று நான் ஒரு CA .

சரி சென்னை தான் போனார் ... யாரவது சொந்தக்காரர்களோ , ஊர் காரர்களோ இருந்தார்களா? உதவி செய்ய ... சரியான உதவியும் வழி காட்டுதலும் இல்லை என்று தான் சொல்லவேண்டும் .

இந்த கோச்சிங், மென்டோர், குரு, மேலாளர் , மேனேஜர் , ஆசிரியர் .. எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள் , வாழ்கையில் இவர்களுடைய பங்கு தான் பிரதானம் .

நாம் வேலை பார்க்கும் இடத்திலேயே காணலாம், ஒரு சாதாரண மேனேஜர் - ஒரு கோச் போல இருக்கும் மேனேஜர், இருவருக்கும் நிறைய வித்யாசம் உண்டு , கோச் கொடுக்கும் ஊக்கம், தன்நம்பிக்கை, அனுபவ பகிர்தல் , தோள் கொடுத்தல்... அப்படி ஒருவர் லிங்கத்துக்கு வாய்க்காதது துரதிர்ஷ்டமே ( அல்லது அவரது முயற்சி போதவில்லை )


ஆனால் அதை விட முக்கிய பங்கு இருவருக்கு உண்டு.. அது தான் அம்மா , அப்பா ..

இந்த இடத்தில ... நீங்க கணபதி மாம்பழம் சாப்பிட்ட கதையின் உள் அர்த்தத்தை எடுத்து கொள்ளலாம், அல்லது உங்களுக்கு வாழை பழத்தை உரித்து கொடுப்பது போல் உள்ள இந்த கதையின் சாரம்சத்தை புரிந்து கொள்ளலாம்.

ஒருவனுக்கு தீடீர் என்று சாமியார் ஆக வேண்டும் என்று ஒரு வெறி, வீட்டிலோ வயதான அம்மா , அப்பா ... எவ்வளவு சொல்லியும் கேட்காமல், இமய மலைக்கோ அல்லது வேறு ஏதோ மலைக்கோ போய் வேதம், யோகம், இன்னும் பல கலைகள் கற்று நிறைய சித்தி போன்ற மாயகளைகளும் கற்று வெகு நாட்களுக்கு பின் தன் ஊர் வந்தான், குளத்தில் குளித்து தூய்மையாக வந்த பொழுது, மேலே ஒரு பறவை அவன் மேல் எச்சம் இட்டது , அவனுடைய ஒரு பார்வையில் அந்த பறவை எரிந்து சாம்பலாகியது . ... பசியாகையால் , ஒரு வீட்டின் முன்பு யாசித்தான், அந்த குடும்ப தலைவியோ உடனே வந்து பார்க்க வில்லை, ஒரு முறை , இரு முறை கூப்பிட்ட பிறகு , கோபமாக அந்த பெண்மணியை பார்த்தான்... ( அந்த பறவையை பார்த்தது போல் )... அந்த பெண் புன்னகையுடன், கொக்கென்று நினைத்தாயா .... அவனுக்கு தேள் கூட்டியது போல் ஆனது ... நான் அந்த பறவையை எரித்தது எப்படி இவளுக்கு தெரியும் என்று... கேட்டு பார்த்தான், அதற்க்கு அவள், என்னை விட இதை பற்றி சொல்ல வேறு ஒருவர் இருக்கிறார் , அவர் இருப்பது கடை வீதியில்... போய் பார் என்றாள்

அங்கு போய் பார்த்தால் அவர் ஒரு பெரிய மாட்டை அறுத்து தொங்கவிட்டு , எல்லாருக்கும் வியாபாரம் செய்யும் ஒரு கசாப்பு கடை காரர். .
.". அந்த அம்மா தான் சொன்னாங்க உங்களை பார்க்கனும்னு"
"எப்படி எல்லாம் தெரியும் உங்களுக்கு" என்று கேட்டான்.

அவர் தன் கடையை மூடி , அந்த இடத்தை சுத்தமாக அலம்பி விட்டு, பின் தன் வீட்டிற்கு அவனையும் கூட்டிக் கொண்டு போனார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் போய் பார்க்கலாமே என்று போனான்.

தன் வீட்டில் போய், மீண்டு தன்னை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள வயதான - கண்பார்வை அவ்வளவு இல்லாத, படுகையில் இருக்கும் தன் தாயாருக்கும் , தகப்பனுக்கும் உணவு, தண்ணீர் எல்லாம் எடுத்து , உணவை ஊட்டி பின் அவனிடம் கேட்டார்..இப்போ சொல்லு என்ன வேண்டும்

அவனுக்கு எல்லாமே புரிய தொடங்கியது ... கற்ற வித்தை, வேதம் ஒன்றுமே இல்லை, பெற்ற தாயையும் , தந்தையையும் பராமரிப்பது தான் தலையாய கடமை.. அதற்க்கு ஈடு எதுவுமே கிடையாது ...

உடனே தன் காவி வச்தரத்தை களைந்தான் ... வீட்டை நோக்கி நடந்தான் ..

எந்த அளவுக்கு அவர் அப்பா அம்மா மேல் மரியாதை வைத்திருந்தார் / வைக்கவில்லை என அந்த பதிவில் தெரிய வில்லை . அப்பா அம்மாவை வைத்து நன்றாக சோறு போட வேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் தான் பட்டினம் வந்திருப்பார்...
ஐந்து வருடமாக வீட்டுக்கு என்று பெரிதாக அல்லது சிறிதாகவோ ஒன்றும் செய்யலை என்கிறார். போய் பார்க்க கூட இல்லை என்கிறார்... இங்க கொஞ்சம் இடிக்கிது, என்ன
தான் காசு இல்லை என்றாலும் , லாரியில் ஏறி ஊரு போய் வந்திருக்கலாம் ... அப்படி பார்த்தால் அவர் வேலை செய்யும் காலங்களில் அவருடைய கூட்டு சரியில்லை என்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது . அந்த மாதிரி வேலை பார்க்கும் இடங்களில் , சாதரணமாக கிடைக்கும் நட்பு, குடி, பீடி , சிகரட் , பாண் பராக் ...இது மூலம் தான் தொடங்கும் , பின் நன்றாக இறுக்கி பிடித்து விடும் .

கிடைக்கும் விடுமுறையில் ..சினிமாவும் , நமீதாவும் ஆக்கிரமித்தால் அதில் இருந்து விலகி வர தெரிய வேண்டும்

சொந்தமாக தொழில் தொடங்கியவுடன் அதை விட்டு போவது இயலாத காரியம், ஓரளவுக்கு அவரின் இயலாமை புரிகிறது.

நாம் என்னை செய்தாலும், என்னை செய்ய நினைத்தாலும், ... சுய புத்தியை உபயோக படுத்த எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். ஒருவர் நம்மை குழியில் தள்ளப்பார்கிறாரா ... நந்தவனத்துக்கு அழைத்து செல்கிறாரா , இதையெல்லாம் ஓரளவுக்கு பார்க்க வேண்டும் . நம்மை விட அவருக்கு இந்த கடையில் எவ்வளவு வருமானம் வரும், எவ்வளவு டீ ஓடும், பால் எங்கு கிடைக்கும், என்னை விலை, எந்த நாள்ல நல்ல வியாபாரம் ..இதெல்லாம் அவர் விரல் நுனியில் இருக்கும்.

அவருடைய வாடிக்கையாளர்களை கேட்டு இருந்தால் , அவர்கள் சொல்லி இறுக்க கூடும் " வேண்டாம்பா... இது ரொம்ப அகல கால் " ... அவர் யார் சொல்பேச்சு கேட்டாரோ ..என்ன ஆசை வார்த்தைக்கு கவுந்துட்டாரோ ????

அவர் திரும்பவும் தன்னுடைய கிராமத்திற்கு சென்று தன வாழ்க்கையை மீண்டும் தொடங்க தயாரானால் , அவர் சில ஆடுகளும் நாலு பசுக்களும் வாங்கட்டும், அதில் ஒரு பசுவுக்கான விலை நான் தருகிறேன், அது போல் இன்னும் மூன்று பேர் நிச்சயம் வருவார்கள் ... அதை வைத்து அதே மாதிரி டீ கடை நடத்தலாம்.. என் அறிவுக்கு தோன்றியது ..

அந்த லிங்கம் என்னை மன்னிப்பாராக , அட்வைஸ் பண்றது, கேள்வி கேட்பது ரொம்ப சுலபம் ... ஆனால் பதில் சொல்வது ரொம்ப கஷ்டம்

12 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

சுந்தர் சார்,

இந்த கந்து வட்டி என்பது மிகவும் கொடுமை.

ஆனால் சிறு வியாபாரிகள் தங்கள் தொழிலை நடத்த இது மிகவும் வேண்டியிருக்கிறது.எனக்கு தெரிந்து எல்லா ஊர்களிலும் இது கொடிகட்டிப்பறக்க்கிறது.

விஷயம் அபாயம் தெரிந்தே இதில் விழுவது மிக கொடுமை.
====
படிப்பு என்று பேச்சு வந்ததால் சொல்கிறேன்.
எனக்கு படிப்புன்னாலே அலர்ஜியா இருந்தது.
நான் எப்போதுமே கடைசி பெஞ்ச் மாண்வன் தான்.நான் 10ஆம் வகுப்பில் 55பெர்செண்ட் தான்.அதன் பின் ஐடிஐ அதன் பின் பார்ட்டைமில் பாலிடெக்னிக். நான் பள்ளியில் ஒழுங்காக படிக்கவில்லை,அந்த வருத்தம் மட்டும் எனக்கு இன்னும் அடங்கவில்லை.இன்னும் ப்ரொஃபெஷனல் படிக்கமுடியவில்லை என்னும் ஆதங்கம் இருக்கிறது.நிச்சயம் ஃப்யூச்சரில் படிப்பேன்.
==
இந்த ஏட்டு சுரக்காய் கல்வி முறையை தூக்கி எறிய வேண்டும்.நாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் பெற்றோரே கண்களை மட்டும் விட்டுவிட்டு இஷ்டத்து இவனை அடிங்க சார்னு விட்டுட்டு போவாங்க.பள்ளிக்கு செல்வதையே மிகவும் சித்திரவதையாக நினைப்பேன்.:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

சுந்தர் சார், உங்கள் எண்ணத்தை நன்றாகப் பதித்துள்ளீர்கள்.

லிங்கம் போல பல மனிதர்களை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம்.

சிறு தொழில் நடத்துவதற்கென வங்கிகளில் கடன் கொடுத்தார்களெனில் இது போன்ற பிரச்சனைகள் வராது. வங்கிகள் கோடிக்கணக்கில் பணக்காரர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் வாங்க வழியில்லாமல் விழிபிதுங்குவார்கள். ஆனால் சில ஆயிரங்களை சிறு வியாபாரிகளுக்குத் தரமாட்டார்கள்..

என்ன செய்ய?

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

//கற்ற வித்தை, வேதம் ஒன்றுமே இல்லை, பெற்ற தாயையும் , தந்தையையும் பராமரிப்பது தான் தலையாய கடமை.. அதற்க்கு ஈடு எதுவுமே கிடையாது ... //
சுந்தர் சார்...உங்களுடைய அலசல் சரியாகதான் இருக்கிறது..

சுல்தான் சொன்னது…

வினவுக்கு என் கருத்துரையில்:
விடயத்தை மட்டும் எழுதுவதை விட லிங்கத்தின் பிரச்னையை எவ்வாறு சரிப்படுத்தலாம் என்ற விபரமும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
முழுச்சமுதாயமே மாறனும் என்ற வாய்ப்பேச்சை விட, ஒவ்வொருவராய் சரிசெய்யும் செயலில் இறங்கினால் நன்றாக இருக்கும்.
இதோ ஒரு திருச்சி சுந்தர் உதவ தயார்.
http://trichisundar.blogspot.com/2010/08/blog-post.html
திருச்சி சுந்தருடன் நானும்.
யாராவது முன் கை எடுங்கள்.

ஜோதிஜி சொன்னது…

சுந்தர் முதலில் கையைக் கொடுங்கள். இரண்டு பதிவுகளையும் முழுமையாக படித்து விட்டு என்னுடைய கருத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.

இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு சமாச்சாரம்.

எல்லா ஆர்வமும் உங்களிடம் இருக்கிறது. ஆனால்? இருக்கும் சூழ்நிலை என்னைப் போலவே ஆட்டிப் பார்க்கிறது?

பதிவுலகம் ஒன்று இல்லாவிட்டால் இரண்டு பேருக்குமே சற்று சிரமம் தான் போல.

மீண்டும் வருவேன். நாளை.

சுல்தானுக்கு வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>தன் வீட்டில் போய், மீண்டு தன்னை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள வயதான - கண்பார்வை அவ்வளவு இல்லாத, படுகையில் இருக்கும் தன் தாயாருக்கும் , தகப்பனுக்கும் உணவு, தண்ணீர் எல்லாம் எடுத்து , உணவை ஊட்டி பின் அவனிடம் கேட்டார்..இப்போ சொல்லு என்ன வேண்டும்

அவனுக்கு எல்லாமே புரிய தொடங்கியது ... கற்ற வித்தை, வேதம் ஒன்றுமே இல்லை, பெற்ற தாயையும் , தந்தையையும் பராமரிப்பது தான் தலையாய கடமை.. அதற்க்கு ஈடு எதுவுமே கிடையாது ...<<<<<<<<<
<<<<<<<<<<<<<<<<<<<<<<<

அப்படி போடுங்க ...

கண்ணாலம் பண்ணிக்கும் முன்னடியே தனிகுடுத்தன்ம்னு சொல்லுறாங்க இந்த காலத்து கண்ணகிகள்....

தனிக்குடுத்தனம் இல்லையின்னா தினம் சண்டை டைவர்ஸ் தான் ...

புருஷனோட ஆயி அப்பன் மேல கேஸ் போட்டு... கோர்ட்டே ரொம்பி வழியுது

சென்னையில கொலைக்கேசை விசாரிக்கும் கிரிமினல் கோர்டுக்கு கூட இல்லாத கூட்டம் பேமிலி கோர்ட்டுக்கு இருக்கு... எந்த அரசு இலாக்காவும் செய்யாத வேலையை ... சனிக்கிழமைகளில் கூட officialலாக family கோர்ட்டு ...அதான் விவாகரத்து செய்யும் இடம் வேலை செய்யுது... பேமிலி கோர்ட்டுக்கு கோடை விடுமுறை கிடையாது ..(மற்ற கோர்ட்டுகளுக்கு உண்டு !!)

இப்படியெல்லாம் இருந்தும் சீர்மிகு சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேல் கேஸ் தேங்கி நிக்குது

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா எல்லாம் எந்த யுகத்தில சாமி.... ? இன்னிக்கு நடக்குறது என்னா ?

தெருவுக்கு ஒரு அனாதை இல்லம்

பணக்காரனக்கு கூட அவங்க ரேஞ்சுக்கு அனாதை இல்லம்

இதான் உண்மை

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

நன்றி கார்த்திக் & செந்தில் வேலன் , ஏதோ மனத்தில் தோன்றியதை எழுதி விட்டேன், நீங்கள் சொன்னது சரி, நாட்ல எல்லா ஊரிலும் இந்த கந்து வட்டி கொடுமை நிறையவே இருக்கு , இங்கு ( வெளி நாடுகளில், பெரிய நகரங்களில் ) அதே வட்டி, பெயர் தான் வேறு வேறு, கிரெடிட் கார்ட், பாலன்ஸ் ட்ரான்ஸ்பர், உடனடி பணம் அது இது ... எத்தனை பேர் அதனால் ஜெயிலில். தவறை ( ஆசையை ) நம் கையில் ( மனதில் ) வைத்து சமூகத்தை , ஆட்சியை, சொத்து வைத்து கொடுக்காத ஆத்தாவை, அப்பனை எப்படி எல்லாரையும் குற்றம் சொல்லிக்கொண்டே போனால் அதற்கு முடிவும் இல்லை பதிலும் இல்லை

நன்றி இஸ்மத் அண்ணே , இந்த பதிவை எழுதும் பொழுது, நீங்கள் உங்கள் தந்தையாரை பற்றி எழுதிய பதிவு மனதில் வந்து போனது ,

நன்றி சுல்தான் பாய் ... தோள் கொடுப்பான் தோழன். இன்று மாலை சந்திப்போம்

நன்றி ஜோதிஜி , நிறைய இது மாத்ரி படிக்கும் பொழுது ... ஏதோ ஒரு இயலாமை , ஆற்றாமை, சில சமயம் ஏதாவது செய்யலாமோ என்ற எண்ணம் ... அது தான் இந்த பதிவு

நன்றி அனானி , நீங்கள் எழுதியது முற்றிலும் சரி ... குறைந்தபட்சம் இந்த மகன் கல்யாணம் ஆகும் வரை ஆத்தா , அப்பனுக்கு ஏதாவது செய்திருக்கலாம் ... அவரவர் வினை , அவரவர்க்கு ... இப்படி நிறைய பேர் பெற்றவர்களை தள்ளி வைத்தால், அவர்களுக்கு தான் நாளையை எதிர் கொள்ள வேண்டும் ( நீங்கள் அனானியாய் இருந்தாலும், என் நண்பன் ஒருவனின் மொழியை பேசி இருக்கிறீர்கள் )

ஜோதிஜி சொன்னது…

சுந்தர் என்னால் தெளிவாகவே இதற்கு பதில் சொல்ல முடியும். வினவு முழுமையாக இன்னும் படிக்க வில்லை. ஆனால் நான் சொல்ல வந்தது வேறு.

ஒருவர் முன்னேற இருக்க முக்கிய காரணம் அவரே தான். நாடு, சமூகம், மற்றவர்கள், உறவினர்கள், தாய் தந்தையர்கள் என்பவர்கள் பின்னால் தான் வருகிறார்கள். என்னை மட்டுமல்ல நான் பார்த்த பலரையும் வைத்து தான் இந்த முடிவுக்கு வந்தேன்.

இந்த அமைதியான நேரத்தில் இதை படித்துள்ளேன். திருப்பூர் தொடர் முடிவதற்குள் இது குறித்து தெளிவாக ஒரு தலைப்பில் எழுதுகின்றேன்.

நீங்கள் நாடு விட்டு நாடு பறந்து கொண்டுருப்பது போல இப்போது மாநிலம் விட்டு மாநிலம் பறந்து கொண்டுருக்கின்றேன். என்னை இழந்து விட்டு வாழ வேண்டிய சூழ்நிலை இது.

பெயரில்லா சொன்னது…

IMPORTANT !!
>>>>>>>>>>>>>>>
இந்த கடை இருக்கிற இடத்தை ஆக்கிரமிச்சு, வளைச்சுப்போட்ட தி.மு.க.வைச் சேர்ந்த உள்ளூர் புள்ளியின் (கோடம்பாக்கம் பகுதி கவுன்சிலர் வெல்டிங்மணியின் மச்சான் என்ற பெயரில் வசூலிக்கும்) அல்லக்கைக்கு போய்ச்சேருகிறது இந்தப் பணம். <<<<<<<<<<<<<<<<<<

AMEN !! :-)

பெயரில்லா சொன்னது…

சார், என் பெயர் சொல்ல விரும்பவில்லை/.அபுதாபி டான்ஸ் பாரில் நிறைய பணம் இழந்துவிட்டேன். ஒரு பார் டான்சர் என்னை ஏமாற்றிவிட்டாள். எனக்கு நீதி கிடைக்க வேண்டாம்.
இனி யாரும் ஏமாறக்கூடாது. துபாய் அபுதாபி டான்ஸ் பார் பற்றி எழுதுங்க சார்.

என்றும் இனியவன் சொன்னது…

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

கருத்துரையிடுக